கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பு

கல்வி சார் புளளிவிவரங்கள், தரவுகள் குறித்த மின்னணுவியல் மேலாண்மைத் தளம்

கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பு (Education management information system) என்பது இந்தியக் கல்வி அமைச்சகத்தின் ஒரு அமைப்பாகும். இது கல்வி நிறுவனங்கள் சார்ந்த தரவுகளை நிர்வகித்தல் மற்றும் தகவல்களை வெளியிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றது. இது பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட கல்வித் தகவல்களின் தரவு சேகரிப்பு, செயலாக்கம், பகுப்பாய்வு மற்றும் அறிக்கை தயார் செய்தல் ஆகியவற்றினைத் தொகுத்து வைக்கின்றது.[1] கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பு மூலம் பெறப்படும் செய்திகள் கல்வி அமைச்சகங்கள், அரசு சாரா அமைப்புகள், ஆய்வாளர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பிற கல்வியாளர்களால் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது கொள்கை மற்றும் திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மற்றும் முடிவெடுத்தல் ஆகியவற்றில் பயன்படுகிறது.[2] கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பு கல்வி முறை செயல்திறனை கண்காணிக்கவும் கல்வி ஆதாரங்கள் மற்றும் சேவைகளை நிர்வகிக்கும் குறிகாட்டிகளை உருவாக்கப் பயன்படுகிறது.[3] that monitor the performance of an education system and to manage the distribution and allocation of educational resources and services.

தொடர் பணிகள்

தொகு

கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பின் வருடாந்திர பணிகள் பின்வருமாறு அமைகின்றன.

  1. தரவு சேகரிப்பு - பள்ளிகளில் இருந்து கணக்கெடுப்பு மூலம் தரவுகள் சேகரித்தல்
  2. தரவு செயலாக்கம் - தரவுகளை ஒழுங்கமைத்தல், செயலாக்குதல், சோதனை செய்தல் மற்றும் சரி செய்தல்
  3. தரவு பகுப்பாய்வு - தரவுகளைத் திரட்டல், கணக்கிடுதல் மற்றும் விளக்குதல்
  4. தரவு அறிக்கை - தகவல் வெளியீடு மற்றும் பொதுமைப்படுத்துதல்.

தொகுதிகள்

தொகு

கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பு அளவு, நோக்கம் மற்றும் திறன் மாறுபாட்டைப் பொறுத்து பின்வரும் நிலையான தொகுதிகளில் கவனம் செலுத்துகிறது.

  • பள்ளிகள் / நிறுவனங்கள்
  • மாணவர்கள்
  • ஆசிரியர்கள் / ஊழியர்கள்
  • வகுப்புகள் மற்றும் தரங்கள்
  • சேர்க்கை மற்றும் பட்டதாரிகள்
  • கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு
  • பாடப்புத்தகங்கள் மற்றும் வளங்கள்
  • நிதி

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு