களக்குடி ஓமாட்சி காளியம்மன்

இன்றைய சம்பவம் நாளைய வரலாறு

களக்குடி ஓமாட்சி காளியம்மன் என்பது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திரு உத்திரகோசமங்கைக்கு அருகில் உள்ள களக்குடி என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் காவல் தெய்வம் ஆகும்.

ஸ்ரீ ஓமாட்சி காளியம்மன் உணவு அருந்தும் இடம்
ஸ்ரீ ஓமாட்சி காளியம்மன் உணவு அருந்தும் இடம்

அம்மனின் வேறுபெயர்கள்

தொகு
  • ஸ்ரீ ஓமாட்சி காளியம்மன்
  • காளியாத்தாள்
  • காளியம்மன்
  • 16 பிள்ளை காரி
  •  
    ஸ்ரீ ஒமாட்சி காளியம்மன் களக்குடி
     
    காளியம்மனின் திரு உருவசிலை
    எல்லை காரி

வரலாறு

தொகு

காளியம்மாள் என்பவள் தனது தோழிகளுடன் சுற்று பயணமாக திரு உத்திரகோசமங்கை கோவிலான மங்களநாதர் ஆலயத்திற்கு வந்து இருந்தனர் அப்பொழுது காளியம்மாள் களக்குடி என்ற கிராமத்தின் விவசாய நிலங்களை கண்டு பிரமித்து போனால், இதை கண்டதும் இயற்கை சூழ்நிலையை விட்டு போக மனம் இல்லை. இந்த இடத்திலே இருந்துவிட வேண்டும் என்று எண்ணினால் ஆனாலும் கூட வந்த தோழிகளோ இதற்கு மறுப்பு தெரிவிக்க, சரி என்று காளியம்மாளும் மனம் மாரிகொண்டால், அங்கு இருந்து தோழிகளோடு செல்ல நினைக்கும்போது ஒரு அரக்கன் தனது சக தோழிகளை கொன்றுவிட பின்பு காளியம்மாள் கோவம் கொண்டு சக பூமியையும் ஒரு குளிக்கி அழியுமாறு சாபம் விட போனால் அப்பொழுது மாணிக்கவாசகர் காளியம்மனின் சாபம் நாயமானதுதான், ஆனால் அதற்காக அந்த அரக்கனை மட்டும் தும்சம் செய், இங்கு வாழும் குழந்தைகளையும் சேர்த்து பழி வங்கதே என்று கூறி 16 குழந்தைகளையும் காண்பித்தார், இக்குழந்தைகளை கண்டவுடன் காளியம்மாள் மனம் சாந்தியடைந்து அரக்கனை தனது கால் அடியில் நசுக்கு அந்த 16 குழந்தைகளையும் தன் குழந்தைகளாக எண்ணி அங்கயே சிலையாக உருவெடுத்தால். இன்று அளவும் ஆற்று படிகையின் மேல் வளம் வருகிறாள் காளியம்மன். அதுமற்றும் இன்றி விவசாயங்கள் செழித்து ஓங்க இக்காளியம்மனை வணங்கி முடித்த பிறகே விதை விதைப்பார்கள் இப்பகுதி கிராம மக்கள்.

புராண வரலாறு

தொகு

சிவபெருமானும் உமாதேவியும் தங்களது ரிஷப வாகனத்தில் ஆகாய மார்க்காக பறந்து தங்களது ஊரான உத்தரகோசமங்கை திருத்தலத்துக்கு வந்து சேர்ந்தார்கள். தென்னாட்டை சுற்றிப்பார்த்த நிகழ்ச்சிகளைப் பற்றி மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உமாதேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களைப் பொத்தினார். இதனால் தென்னாடு இருண்டு போனது.

தென்னாட்டில் உள்ள அனைத்து உயிரினங்களும் கண்தெரியாமல் இருப்பிடம் இன்றி, உணவின்றி, பசியும் பட்டினியாக கிடக்க நேரிட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தன் மனைவி என்றும் பாராமல் பார்வதி தேவியை கருப்பு நிற ஓமாட்சி காளியாக போ என்று சாபமிடுகின்றார். சிவபெருமான் தன்னை சாபத்துக்கு உள்ளாக்கியதை அறிந்த பார்வதி தன் விசுவரூபத்தைக் காட்டி கோபம் கொண்டு சிவபெருமானை உத்திரகோச மங்கை திருத்தலத்தில் நடனச்சாலையில் நடனமாட போட்டிக்கு அழைத்தாள்.

இந்த நடனப்போட்டியில் நான் தோற்றால் காளியாகப் போக சம்மதிக்கிறேன் என்றாள். இதையடுத்து சிவனும், பார்வதியும் உத்தரகோச மங்கை திருத்தலத்தில் உள்ள நாட்டிய சாலையில் நடன போட்டியைத் தொடங்கினார்கள். நடனப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. இந்த போட்டி நடனத்துக்கு திருமால், பிரம்மன், இந்திரன் முதலியோர் தீர்ப்பு கூறும் நடுவர்களாக இருந்தார்கள். சிவன், பார்வதி நடனத்தை கண்டுகளிப்பதற்கு வேண்டி சொர்க்கலோக வாசிகளும், பூலோகவாசிகளும் மற்றும் உயிரினங்களும் கூட்டம் கூட்டமாக உத்தரகோசமங்கைத் திருத்தலத்தில் கூடினார்கள்.

வழிபாடு முறைகள்

தொகு
  • தாமரை பூ சாத்தி வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும்.
  • தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை பிறக்கும்.
  • தீச்சட்டி, பால்குடம், வேல் போன்றவற்று எடுத்து வழிபட்டால் மன நிம்மதி பெருகும்.
  • காளியம்மனை நினைத்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினால் பதவி உயர்வு கிடைக்கும்.
  • எலுமிச்சை மாலை அணிவித்து செவ்வாய் வெள்ளி விளக்கு ஏற்றி வந்தால் திருமண வரம் கிடைக்கும்.

ஆலயத்தின் சிறப்பு

தொகு
  • பல ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை உருவம்.
  • அம்மனின் முன்பே அரக்கனும், இடது புறம் ராகாச்சி அம்மன் சிலையும் அமைந்துள்ளது.
  • நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது.
  • மாணிக்கவாசகர் அவர்களால் திருவாசகத்தில் பாட பெற்ற ஒரு தளம் என்பது குறிப்பிட தக்கது.

ஆலயத்திற்கு செல்லும் வழி

தொகு

இராமநாதபுரத்தில் இருந்து முதுகலதூர் உத்திரகோமங்கை செல்லும் பேருந்தில் ஏறி களக்குடி என்று பயண சீட்டு வாங்கினால் கோவிலின் சன்னதி போகும் வழியிலே பேருந்து இறக்கி விடும்.

  • இராமநாதபுரதில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும்
  • உத்திரகோசமங்கையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும்
  • மதுரையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலும்
  • பரமக்குடியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும்
  • தூத்துக்குடியில் இருந்து 99 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது.