களஞ்சியம் சமூக வானொலி

களஞ்சியம் சமூக வானொலி (Kalanjiam Samuga Vanoli - Kalanjiam Community Radio) நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள விழுந்தமாவடி என்னும் கிராமத்தில் செயற்பட்டு வரும் ஒரு வானொலி ஒலிபரப்பு நிலையமாகும்.

நிறுவனம்

தொகு

"DHAN" என்ற அறக்கட்டளை நிறுவனம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ, விவசாய சமூகங்களுக்கு உதவி வருகிறது. அந்த வகையில் இந்நிறுவனம் களஞ்சியம் சமூக வானொலி நிலையத்தைத் தொடங்க உதவியது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் இந்த நிலையத்துக்குத் தேவையான வளங்களைக் கொடுத்துதவியது. பெங்களூருவிலுள்ள VOICES என்ற அமைப்பு இதற்குத் தேவையான தொழினுட்ப உதவிகளைச் செய்கிறது. இந்த நிலையம் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கம் செயற்படுகிறது.[1]

நோக்கம்

தொகு

களஞ்சியம் சமூக ஊடக நடுவத்தின் நோக்கங்களாவன:

  • கடற்கரையோரமுள்ள தாக்கத்திற்குள்ளாகக்கூடிய சமூக மக்கள் தங்களைப் பாதிக்கும் சமூக, பொருளாதார, பண்பாட்டு பிரச்சனைகள் பற்றிப் பேச அவர்களைத் தூண்டுவதும், வலுவூட்டுவதும்
  • தனிமனித கருத்துகள், உள்ளூர் சாதனைகள், கல்வி, கலாசார பரிமாற்றம், கலைகளை நயத்தல், சமூக நடவடிக்கைகளில் ஈடுபடல் என்பவை தொடர்பாக அச்சமூகத்தவர் வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்பவற்றை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை உருவாக்கவும் வினியோகிக்கவும் வசதி செய்தல்.
  • அனர்த்தங்களினால் பாதிக்கப்படக்கூடிய கடற்கரை பகுதிகளில் அனர்த்தங்களை சமாளிக்கவும், அவர்களது வாழ்வாதாரத்தை வலிமையுறச் செய்யவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் தொலைநோக்குடன் அச்சமூகத்தவரை தயார் படுத்துதல்.[1]

ஒலிபரப்பு

தொகு

ஒவ்வொரு நாளும் உள்ளூர் நேரம் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பண்பலை 90.8 MHzஇல் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.[2]

தொடர்பு

தொகு

களஞ்சியம் சமூக ஊடக நடுவத்தை விழுந்தமாவடி (அஞ்சல் குறியீடு: 611 112) கிராமத்தில் வெள்ளி சந்தை என்னுமிடத்தில் தொடர்புகொள்ளலாம். தொலைபேசி:+91 4365 268606 மின்னஞ்சல்: kalanjiamvanoli@gmail.com[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=களஞ்சியம்_சமூக_வானொலி&oldid=3238913" இலிருந்து மீள்விக்கப்பட்டது