விழுந்தமாவடி

விழுந்தமாவடி (Vilundamavadi) என்பது தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டத்தைச் சேர்ந்த ஒர் ஊராகும்.

விழுந்தமாவடி
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. ஆகாசு, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம்

தொகு

நாகப்பட்டினத்திலிருந்து வேதாரணியம் செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விழுந்தமாவடி பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 1.3 கிலோ மீட்டர் கிழக்கே இந்த ஊர் அமைந்துள்ளது.

கீழ்வேளூர் வட்டத்தில் மொத்தம் 53 கிராமங்கள் உள்ளன.

இந்த ஊரின் அண்மையில் திருப்பூண்டி, கீழப்பிடகை, கீழையூர், வெண்மனச்சேரி, காராப்பிடகை, வேட்டைக்காரன் இருப்பு, தென்மருதூர், அடமங்கலம், ஆனைக்குடி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.

மக்கள் தொகை

தொகு

இந்த ஊரின் மக்கள் தொகை 5848 ஆகும் (ஆண்கள்: 2804, பெண்கள்: 3044).[4]

சமூக வானொலி

தொகு

விழுந்தமாவடியில் களஞ்சியம் சமூக வானொலி நிலையம் என்ற பெயரில் ஒரு சமூக வானொலி நிலையம் செயற்படுகிறது.[5]

ஆமை வளர்ப்பு

தொகு

விழுந்தமாவடியில் வனத்துறையின் சார்பில் முட்டை பொரிப்பகம் அமைக்கப்பட்டு, கடற்கரையில் ஆமைகள் இட்டுச் சென்ற முட்டைகளை அவற்றில் பொரிக்க வைத்துப் பின் குஞ்சுகளை கடலில் விடுகின்றனர். விசைப்படகுகளில் அடிபட்டும், பிளாத்திகு கழிவுகளை உண்பதாலும் கடல் ஆமைகள் இறந்து வருகின்றன. ஆமை முட்டை பொரிப்பக ஊழியர்கள் கடலோரங்களில் ஆமை முட்டைகளை சேகரித்து 40 முதல் 75 நாட்கள் வரை அவற்றினைப் பராமரித்து, குஞ்சுகள் பொரித்ததும் கடலில் விடுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. Population distribution of village Vizhunthamavadi
  5. Community Media Initiative of DHAN Foundation

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழுந்தமாவடி&oldid=3738369" இலிருந்து மீள்விக்கப்பட்டது