களிப்பாறை வளிமம்

களிப்பாறை வளிமம் (Shale Gas) என்பது களிப்பாறைப் பகுதிகளில் இருந்து பெறப்படும் இயற்கை எரிவளியினைக் குறிக்கும். இது கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க இயற்கை எரிவளி வளத்தின் முக்கிய மூலமாக அமைந்திருக்கிறது. இன்னும் கனடா, ஐரோப்பா, ஆசியா, ஆசுத்திரேலியா போன்ற நாடுகளிலும் களிப்பாறை வளிமத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்திருக்கிறது. 2020ம் ஆண்டிற்குள் வட அமெரிக்கக் கண்டத்தின் இயற்கை எரிவளி உற்பத்தியில் ஐம்பது விழுக்காடுகள் களிப்பாறை வளிமத்தில் இருந்தே கிடைக்க வாய்ப்புள்ளது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.[1]

உலகெங்கும் உள்ள களிப்பாறைப் பகுதிகள் (38 நாடுகளில்)

உலக ஆற்றல் வளத்தினைப் பெரிதும் பெருக்கும் வாய்ப்பினைக் களிப்பாறை வளிமம் தருகிறது என்றும் சிலர் கருதுகின்றனர்.[2]

நிலவியல்

தொகு
 
பிற வளிமங்களுடன் களிப்பாறை வளிமத்தை ஒப்பிடும் படம்

களிப்பாறைகள் போதிய புரைமைத் தன்மை கொண்டவையல்ல என்பதால், அவற்றின் வழியாகக் கணிசமான வளிமம் பாய்ந்து எரிவளிக் கிணற்றுத் துளைகளை அடைய வழி இருப்பதில்லை. அதனால் இயற்கையாகப் பெருமளவில் எரிவளியை உற்பத்தி செய்ய இயலாது. வணிக நோக்கில் பெருமளவில் இவ் எரிவளியை உற்பத்தி செய்ய வேண்டுமானால், களிப்பாறைகளின் புரைமைத் தன்மையை அதிகரிக்கும் வண்ணம் அவற்றை உடைத்தல் (fracking) வேண்டும்.

முந்தைக் காலத்தில் இயற்கையாக அமைந்த உடைப்புக்களில் இருந்து களிப்பாறை வளிமம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், அண்மைய காலங்களில் நீர்ம உடைத்தல் (hydraulic fracking) போன்ற நவீன நுட்பங்களின் உதவியால் கிணற்றுத் துளைகளின் அருகே பல செயற்கை உடைப்புக்களை ஏற்படுத்தி, அவற்றின் வழியே உற்பத்தி அதிகரிக்கப் படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Shaun Polczer, Shale expected to supply half of North America's gas பரணிடப்பட்டது 2010-05-23 at the வந்தவழி இயந்திரம், Calgary Herald, 9 April 2009, accessed 27 August 2009.
  2. Clifford Krauss, "New way to tap gas may expand global supplies," New York Times, 9 October 2009.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=களிப்பாறை_வளிமம்&oldid=3355709" இலிருந்து மீள்விக்கப்பட்டது