களியப்பேட்டை வேணுகோபால சுவாமி கோயில்

களியப்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோயில் களியப்பேட்டையில் அமைந்துள்ள பழைமையான பெருமாள் கோயில். [1]

களியப்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோயில்
பெயர்
பெயர்:களியப்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:களியப்பேட்டை
மாவட்டம்:செங்கல்பட்டு
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஸ்ரீவேணுகோபால சுவாமி
தாயார்:செண்பகவல்லித் தாயார்

வரலாறு

தொகு

விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கோவில். காஞ்சி வரதராஜ பெருமாள்மீது பக்தி கொண்ட தொட்டையாச்சார் எனும் பக்தர் இங்கு வசித்து வந்ததால் தொட்டையாச்சார்புரம் எனும் பெயரில் புகழ் பெற்றிருந்த ஊர். இவ்வூருக்கு களியப்பேட்டை என்ற பெயர் பின்பு வந்தது.[1]

அன்னிய சுல்தானியர்கள் காலத்தில் மக்கள் ஊரைக் காலி செய்துவிட்டுச் சென்றதிலிருந்து பல நூற்றாண்டுகள் அதிகம் கவனப்பாரின்றி இருந்து பின்னர் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு 11.09.2013 (ஆவணி 26) அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 குமுதம் ஜோதிடம்; 6.9.2013;