களுவாஞ்சிக்குடி

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

களுவாஞ்சிக்குடி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். மட்டக்களப்பு நகரில் இருந்து தென்கிழக்கில் 27 கி.மீ. தூரத்தில் உள்ளது. களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் களுவாஞ்சிக்குடி தெற்கு, களுவாஞ்சிக்குடி வடக்கு, களுவாஞ்சிக்குடி வடக்கு 1 என 3 கிராம சேவையாளர் பிரிவுகள் காணப்படுகின்றன. இங்குள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,814 ஆகும்.[1] களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்திற்கான அஞ்சல் குறியீட்டு இலக்கம் 32000 ஆகும்.[2]

களுவாஞ்சிக்குடி
நகரம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுமண்முனை தெற்கு, எருவில் பற்று

வரலாறு

தொகு

மாகோன் காலத்தில் மட்டக்களப்பில் இருந்த ஏழு குடிகளுள் ஒன்றாகிய கவுத்தன்குடி இங்கு குடியேறியதாக மட்டக்களப்புத் தமிழகம் குறிப்பிடுகின்றது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistical Information". Archived from the original on 2014-01-04. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
  2. Kaluwanchikudi Postal Code 30200
  3. மட்டக்களப்புத் தமிழகம் - பக்கம் 435,436
"https://ta.wikipedia.org/w/index.php?title=களுவாஞ்சிக்குடி&oldid=4123407" இலிருந்து மீள்விக்கப்பட்டது