கள்ளச்சிரிப்பு
கள்ளச்சிரிப்பு என்பது 2018 இல் வெளிவந்த இந்திய தமிழ் மொழி த்ரில்லர் வலை தொலைக்காட்சி தொடர் ஆகும்.
கள்ளச்சிரிப்பு | |
---|---|
Presentation | |
நடிகர்கள் | அம்ருதா சீனிவாசன்
ராஜலட்சுமி |
வகை | பரபரப்பூட்டும் திரைப்படம் |
உருவாக்கம் | கார்த்திக் சுப்புராஜ் |
எழுத்தாளர் | ரோகித் நந்தக்குமார் |
இயக்குனர் | ரோகித் நந்தக்குமார் |
மொழி | தமிழ் |
Production | |
தயாரிப்பு | ஸ்டோன் பென்ச் புரொடெக்சன்ஸ் |
பகுதிகளின் எண்ணிக்கை | 1 |
அத்தியாயங்களின் எண்ணிக்கை | 8 |
Publication | |
Original release | 23 ஜூலை 2018 – 30 ஜூலை 2018 |
வழங்குனர் | ஜீ5 |
வலைதளம் | official website |
இதனை ஜீ 5, வீடியோ ஆன் டிமாண்ட் சேவையில் வழங்கியது.[1] இந்த வலைத் தொடரை ரோஹித் நந்தகுமார் இயக்கியுள்ளார் மற்றும் பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸின் கீழ் தயாரித்தார்.[2] இது கார்த்திக் சுப்பராஜின் முதல் வலைத் தொடர் தயாரிப்பாகும்.இதனை ஜீ 5 இல் 23 ஜூலை 2018 அன்று வெளியிடப்பட்டது, இறுதியில் 30 ஜூலை 2018 அன்று 8 அத்தியாயங்களுடன் முடிந்தது. இதில் அம்ருதா சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவருடன் விகாஸ், விக்னேஷ் சண்முகம், ராஜலட்சுமி, உமா, மகேஸ்வரன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் நடித்திருந்தனர்.[3] இந்த வலைத் தொடர் அமெரிக்கா மாப்பிள்ளைக்குப் பிறகு ஜீ 5 நெட்வொர்க்கால் தொடங்கப்பட்ட இரண்டாவது வலைத் தொடராகும்.[4] பெண் கதாப்பாத்திரங்களுக்கு தரப்படுகின்ற முக்கியத்துவதால் வலைத் தொடர் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[5][6] தொடரில் கருப்பொருளாக காமம், பாலியல், ஆபாச படங்கள், எல்ஜிபிடி, கருக்கலைப்பு மற்றும் திருமணத்திற்கு புறம்பான விவகாரங்கள் ஆகியவையும், காதலும் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது.[7][8]
கதை
தொகுஇந்தத் தொடர் 24 வயதான மகதியை பெற்றோர்கள் வற்புருத்தி திருமணத்திற்கு உட்படுத்துவதிலிருந்து தொடங்குகிறது. புதிதாக திருமணமான மகாதி கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தற்செயலாக தனது கணவரை தற்காப்புக்காக குத்திக் கொலை செய்கிறார். பிறகு தன்னுடைய காதலனுக்கு நிகழ்ந்ததை தெரிவிக்கிறார். இந்த திருமணத்தில் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட கதாப்பாத்திரங்களுடன் இத்தொடர் நகர்கிறது. இந்த தொடரில் ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு இடையிலான காதல் கதையும் இடம்பெற்றது.[9]
நடிகர்கள்
தொகு- மகதியாக அம்ருதா சீனிவாசன்
- ராமாக விகாஸ்
- ராமின் காதலனாக விக்னேஷ் சண்முகம்
- ராஜலட்சுமி
- உமா
- மகேஸ்வரன்
- நந்தகுமார்
- சென்னு மோகன்
தயாரிப்பு
தொகுரோஹித் நந்தகுமார் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருக்கு இடையில் ஒரு வலைத் தொடரை உருவாக்கும் யோசனை அவியால் என்ற ஆந்தாலஜி திரைப்படம் வெளியான பின்னர் முடிவானது.[10] அவியல் திரைப்படத்தின் ஆறில் ஒரு சிறுகதையை நந்தக்குமார் எழுதி இயக்கியிருந்தார். அதனால் கார்த்திக் சுப்பராஜ் தனது சொந்த தயாரிப்பு பேனர் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸின் கீழ் இத்தொடரை தயாரித்தார். .[11][12]
குறிப்புகள்
தொகு- ↑ "ZEE5 to launch Tamil web series 'Kallachirippu'" (in en-GB). BizAsia | Media, Entertainment, Showbiz, Events and Music. 2018-07-24. https://www.bizasialive.com/zee5-launch-tamil-web-series-kallachirippu/.
- ↑ "ZEE5 launches Tamil web series Kallachirippu starring Amrutha Srinivasan" (in en). mid-day. 2018-07-25. https://www.mid-day.com/articles/zee5-launches-tamil-web-series-kallachirippu-starring-amrutha-srinivasan/19638191.
- ↑ "Kallachirippu-fame Amrutha Srinivasan joins Karthi’s Dev". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/jul/31/kallachirippu-fame-amrutha-srinivasan-joins-karthis-dev-1851325.html.
- ↑ "A murder by mistake in Tamil web series ‘Kallachirippu’ on Zee5" (in en-US). Scroll.in. https://scroll.in/reel/887738/a-murder-by-mistake-in-tamil-web-series-kallachirippu-on-zee5.
- ↑ "Kallachirippu review: Zee5's Tamil web series is an unbelievably dark thriller with unpredictable characters- Entertainment News, Firstpost" (in en-US). Firstpost. https://www.firstpost.com/entertainment/kallachirippu-review-zee5s-tamil-web-series-is-an-unbelievably-dark-thriller-with-unpredictable-characters-4865971.html.
- ↑ "'Kallachirippu' review: An intriguing thriller with never before seen characters". The News Minute. 2018-07-24. https://www.thenewsminute.com/article/kallachirippu-review-intriguing-thriller-never-seen-characters-85308.
- ↑ "Kallachirippu review: This Karthik Subbaraj production is a kickass entertainer" (in en-US). The Indian Express. 2018-07-29. https://indianexpress.com/article/entertainment/web-series/kallachirippu-review-karthik-subbaraj-5280648/.
- ↑ "Team 'Kallachirippu': Why should lust not be worthy of respect?". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/aug/02/team-kallachirippu-why-should-lust-not-be-worthy-of-respect-1851797.html.
- ↑ Raman, Sruthi Ganapathy. "‘Hard pill to swallow’: What ‘Kallachirippu’ director wanted from the female lead of his web series" (in en-US). Scroll.in. https://scroll.in/reel/888592/hard-pill-to-swallow-what-kallachirippu-director-wanted-in-the-female-lead-of-his-tamil-series.
- ↑ "Kallachirippu Teaser: This Karthik Subbaraj-Produced Web-Series Spells Intrigue & Thrill" (in en-US). Silverscreen.in. 2018-07-19. https://silverscreen.in/tamil/news/kallachirippu-teaser-karthik-subbaraj-web-series/.
- ↑ "Karthik Subbaraj is thrilled about web series Kallachirippu" (in en-US). The Indian Express. 2018-07-25. https://indianexpress.com/article/entertainment/web-series/karthik-subburaj-kallachirippu-5274134/.
- ↑ "Karthik Subbaraj goes full throttle as producer" (in en). www.deccanchronicle.com/. 25 June 2017. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/250617/karthik-subbaraj-goes-full-throttle-as-producer.html.