கள்ளர் வெட்டுத் திருவிழா
கள்ளர் வெட்டுத் திருவிழா என்பது தென்தமிழகத்தின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ் பெற்ற விழாவாகும். இந்த திருவிழாவைக் காண ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் தேரிக்குடியிருப்பு அருகேயுள்ள குதிரைமொழி கிராமத்திலுள்ள கற்குவேல் ஐயனார் கோவிலில் கூடுகிறார்கள்.[1] இந்தத் திருவிழாவானது தூத்துக்குடி மாவட்டம் குதிரைமொழியில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முப்பதாவது நாள் நடைபெற்று வருகிறது. திருவிழா கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி 28ம் நாள் திருநெல்வேலி பாளையங்கோட்டை இடையர் இனத்தைச் சேர்ந்த மாலையம்மன் ஐவராசா குடும்பத்தினா் நடத்தும் மாலையம்மன் ஐவராசா பூசையுடன் தொடங்கி கள்ளர் வெட்டு முடிந்த மறுநாள் திருநெல்வேலி தச்சநல்லுார் இடையர் இனத்தைச் சேர்ந்த முன்னடி பட்டறைதாரர் நடத்தும் படப்பூசையுடன் முடிவடைகிறது.[2]
அநீதி தலைதூக்கியபோது, ஆதனை, அய்யன் அழித்த நாளை கள்ளர் வெட்டுத் திருவிழாவாக இப்பகுடி மக்கள் கொண்டாடுகிறார்கள்.[3]
திருவிழா
தொகுகோயிலின் முன்னே உள்ள தேரிப்பகுதியில் மேல்புறம் சவுக்கு கட்டைகள் மூலம் பாதுகாப்பு அரண் அமைத்து அதில் கள்ளர் எனும் இளநீரை வைத்து நாலாபுறமும் பக்தர்களின் நடுவே வெட்டப்படும். பின்பு பக்தர்கள் அங்கிருந்து புனித மண் எடுத்துச் செல்கின்றனர். இந்த புனித மணலை எடுத்து வீட்டில் பூஜை அறையில் வைத்தால் நன்மை நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா - நாளை தொடங்குகிறது". Dailythanthi.com. 2020-11-15. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
- ↑ "கள்ளர் வெட்டுத் திருவிழா என்பது தென்தமிழகத்தின் திருநெல்வேலி". ta.shops-net.com. Archived from the original on 2021-11-17. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
- ↑ "கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர்வெட்டு திருவிழா: புனித மண்ணை சேகரித்த பக்தர்கள்..!". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
- ↑ "Arulmigu Karkuvel Ayyanar Temple, Therikudieruppu - 628206, Thoothukudi District [TM038189].,ayyanar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
வெளி இணைப்புகள்
தொகு- கள்ளர் வெட்டுத் திருவிழா
- கள்ளர் வெட்டுத் திருவிழா செய்தி (தினமணி)
- கள்ளர் வெட்டு விழாச் செய்தி பரணிடப்பட்டது 2012-12-16 at the வந்தவழி இயந்திரம் (தினகரன்)
- கற்குவேல் ஐயனார் திருக்கோவில் தளம் பரணிடப்பட்டது 2012-12-19 at the வந்தவழி இயந்திரம்