கள்வர் குடியினர்
கள்வர் என்போர் திருவேங்கடமலைப் பகுதியில் சங்க காலத்தில் வாழ்ந்த பழங்குடி மக்கள். இவர்கள் ஆறலை கள்வர் அல்லர். கள்ளுக்காக யானைக்கன்றுகளைப் பிடித்துவந்து கள்ளுக்காக விற்றவர்கள். [1] தலையில் மராம் மரத்துப் பூவைச் சூடிக்கொள்வார்கள். மராம் மரம் நாரோட்டம் உள்ள மரம். அதனைப் பிளந்து நார்க்கயிறாக்கி யானைக் கன்றுகளைப் பிடித்துவரப் பயன்படுத்தினர்.
அடிக்குறிப்பு
தொகு- ↑
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
கறை அடி மடப் பிடி கானத்து அலற,
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து,
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து,
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி,
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்,
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் (அகநானூறு 83)