மராஅம் (மரம்)

தாவர இனம்

மரா மரத்தைப் பழந்தமிழ் மராஅம் என்றே வழங்கியது. பின்னர் இதனை மராம் என்றனர். இராமன் ஏழு மரா மரத்தைத் துளைத்து அம்பு எய்த செய்தி நமக்குத் தெரியும்.

மராஅம் மலர்

மராஅம் பூவின் நிறம் வெள்ளை.[1]
சுண்ணாம்பு நீறு போல் வெண்மையாகப் பூக்கும்.[2]
பலராமன் போல் வெண்ணிறம் கொண்டது.[3]
மணம் மிக்கது.[4]
பூ வலமாகச் சுழன்றிருக்கும்.[5]
குராலொடு மராஅம் ஊர்த்தெருவில் ஓங்கிப் பூக்கும்.[6]

பயன்பாடு

குவித்து விளையாடும் பூ.[7]
கூந்தலில் சூடும் பூ.[8]
மகளிர் கூந்தலில் பாதிரி, அதிரல் ஆகிய பூக்களோடு மராஅம் பூவையும் அடைச்சிக்கொள்வர் (சடைவில்லை ஆக்கிச் செருகிக்கொள்வர்).[9]
கானவன் மராஅம் மரத்தில் ஏறிக்கொண்டு யானைமேல் வேல் எறிவான்.[10]
பருந்து இருக்கும் அளவுக்கு உயரமானது.[11]
கொற்றவை உகந்த மலர். அதிரல், பாதிரி, மராஅம் மலர்கள் அணங்கு (கொற்றவை) மேல் உதிர்ந்து அவளைப் பராவும் (துதிபாடும்).[12]
ஏறு தழுவும் வீரர்கள் தென்னவன் (சிவன்) அமர்ந்த ஆலமரத்தையும், கொற்றவை அமர்ந்த மராம் மரத்தையும் தொழுதபின் ஏறு தழுவும் தொழுவினுள் புகுவர்.[13]

இவற்றையும் காண்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. வால் வீ செறிந்த மராஅம் - மணிமேகலை 19-76
  2. சுதை விரித்து அன்ன பல்பூ மராஅம் - அகநானூறு 211-2
  3. ஒருகுழை ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅம் - கலித்தொகை 26-1
  4. மராஅம் அலைத்த மணவாய்த் தென்றல் - அகநானூறு 21-12
  5. வலஞ்சுரி மராஅம் வேய்ந்த நம் மணம் கமழ் தண்பொழில் - ஐங்குறுநூறு 348
  6. அகநானூறு 265-20
  7. குறிஞ்சிப்பாட்டு 85
  8. தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் - நற்றிணை 20
  9. அகநானூறு 261-4
  10. அகநானூறு 172-7
  11. மராஅம் ஏறி ... பருந்து உயவும் என்றூழ் - அகநானூறு 81-8
  12. அகநானூறு 99-8
  13. நல்லவர் அணி நிற்ப, துறையும், ஆலமும், தொல்வலி மராஅமும், முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ. - கலித்தொகை 101
"https://ta.wikipedia.org/w/index.php?title=மராஅம்_(மரம்)&oldid=2810462" இலிருந்து மீள்விக்கப்பட்டது