கழுவெளி சதுப்பு நிலம்
கழுவெளி சதுப்பு நிலம், இந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் - வானூர் இடையே கழுவெளி சதுப்பு நிலம் உள்ளது. வங்காள விரிகுடாவை ஒட்டி, 75 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்த கழுவெளி நன்னீர் சதுப்பு நிலத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. [1]
கழுவெளி சதுப்பு நிலம் | |
---|---|
அமைவிடம் | திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு |
ஆள்கூறுகள் | 12°10′N 79°55′E / 12.167°N 79.917°E |
ஏரி வகை | சதுப்புநிலம் |
வடிநிலப் பரப்பு | 75 சகிமீ |
வடிநில நாடுகள் | இந்தியா |
ஆக்கிரமிப்புகள்
தொகு600 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த கழுவெளி சதுப்பு நிலம், இறால் வளர்ப்பு பண்ணியாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது 75 சதுர கிலோமீட்டர் அளவிற்கு சுருங்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. [2]