கவணை
கவணை என்பது கவண் போன்ற மற்றொரு கருவி.
கவண் ஆடவர் பயன்படுத்தும் கருவி. கவணை மகளிர் பயன்படுத்தும் கருவி.
இக்காலக் கவணையில் எலாஸ்டிக் உந்துவிசை கல்லை எறியும். கவட்டையில் இரண்டு இழுவிசை ரப்பர்கள் கட்டப்பட்டு நடுவில் உள்ள வாரில் மணியாங்கல் வைத்து இழுத்து விடப்படும்.
சங்க காலத்தில் ரப்பர் இல்லை. விசித்திறன் கொண்ட இரண்டு மூங்கில் சிம்புகள் கவட்டையில் கட்டப்பட்டிருக்கும். மூங்கில் சிம்புகள் வாரால் இணைக்கப்பட்டிருக்கும். வாரில் கல்லை வைத்து இழுத்து விட்டால் மூங்கில் சிம்பின் விசை மணியாங்கல்லை உந்தித் தள்ளும்.
சங்க கால மகளிர் தினைப்புனம் காவலின்போது செவாய்ப் பாசினங்களை (கிளிகளை) ஓட்ட இதனைப் பயன்படுத்தினர்.[1]
இவற்றையும் பார்க்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑
துய்த்தலைப் புனிற்றுக்குரல் பால்வார்பு இறைஞ்சி
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று
துறுகல் மீமிசைக் குறுவன குழீஇ,
செவ்வாய்ப் பாசினம் கவரும் என்று அவ்வாய்த்
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க என,
எந்தை வந்து உரைத்தனன் – நற்றிணை 206