கவனை கோட்டை
கவனைக் கோட்டை (Kavnai fort) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவின் நாசிக் மாவட்டத்தின் இகத்புரி வட்டத்தில் உள்ள கவனைக் கிராமத்திற்கு வடக்கே ஒரு குன்றில் அமைந்துள்ளது. பிரதான வாயில் மற்றும் ஒரு சிறிய குளம் மட்டுமே மீதமுள்ள கட்டமைப்புகள் ஆகும்.
கவனைக் கோட்டை | |
---|---|
कावनई किल्ला | |
நாசிக் மாவட்டம், மகாராட்டிரம் | |
கவனைக் கோட்டை தோற்றம் | |
ஆள்கூறுகள் | 19°46′23.1″N 73°37′09.8″E / 19.773083°N 73.619389°E |
வகை | Hill fort |
இடத் தகவல் | |
உரிமையாளர் | மகாராட்டிர அரசு |
மக்கள் அனுமதி |
ஆம் |
நிலைமை | அழிவில் |
இட வரலாறு | |
கட்டிடப் பொருள் |
கல் |
புவியியல்
தொகுகவனைக் கிராமம் இகத்புரி சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இகத்புரியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இக்கோட்டை அமைந்துள்ளது. கபிலதீர்த் கவனைக் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
கோட்டையினை அடைய கவனைப் பகுதியிலிருந்து தொடங்கும் ஒரு மலைத்தொடரின் பாதை வழியே செல்லவேண்டும். கடைசி மலை ஏற்றம் செங்குத்தாக உள்ளது. மோசமான பாறைகளில் வெட்டப்பட்ட படிகள் ஏணி போன்று அமைந்துள்ளது.
வரலாறு
தொகுஇந்தக் கோட்டை முகலாயர்களால் கட்டப்பட்டது. உத்கீர் போருக்குப் பிறகு (1760) ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் இது நிஜாமால் பேஷ்வாக்களுக்கு வழங்கப்பட்டது. இந்தக் கோட்டையும், திரிங்கல்வாடி மற்றும் பதினைந்து பிற கோட்டைகளும் படைத்தலைவர் பிரிக்சு தலைமையில் பிரித்தானியத் தரைப்படையால் கைப்பற்றப்பட்டன.[1]
படங்கள்
தொகு-
கோட்டையில் உள்ள குளம்
-
கோட்டையின் பிரதான நுழைவாயில்