கவரப்பட்டு சந்திர சேகரேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
கவரப்பட்டு சந்திர சேகரேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் கடலூர் மாவட்டத்தில் கவரப்பட்டு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [1]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலின் மூலவராக சந்திர சேகரேசுவரர் உள்ளார். இறைவி காமாட்சியம்மன் ஆவார். [1]
அமைப்பு
தொகுஅருணாசலேசுவரர், காசி விசுவநாதர், விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சிவன் கோயிலான இங்கு லட்சுமி நாராயணப்பெருமாளும், ஆஞ்சநேயரும் உள்ளனர். நவக்கிரகங்கள் தம்பதிசமேதராய் காட்சியளிக்கின்றனர். [1]
விழாக்கள்
தொகுபிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், திருவாதிரை உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன. [1]