கவிகொண்டல வெங்கடராவ்

கவிகொண்டல வெங்கட ராவ்  ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு மொழி எழுத்தாளர்.

கவிகொண்டல வெங்கட ராவ்

இளமைப்பருவம் மற்றும் படைப்புகள்

தொகு

இவர் ஆந்திரப் பிரதேசத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் 1892 சூலை இருபதாம் நாள் பிறந்தார். 1910 ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கிய இவர் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் இருநூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், விசனசதானமு, இன்பா கோட்டா ஆகிய இரு நாவல்கள், நூற்றுக்கணக்கான கவிதைகளும் பாடல்களும் படைத்துள்ளார்.

சிறப்புப் பெயர்கள்

தொகு

கவிகொண்டல வெங்கட ராவ் இயற்கைச் சார்ந்த கவிதைகள் பல படைத்துள்ளதால் இயற்கைக் கவி என்று அனைவராலும் போற்றப்பட்டார். இவரது நண்பரும் வழிகாட்டியுமான கவிஞர் மற்றும் ஓவியரான இராஜமுந்திரி அரசாங்க கலைக் கல்லூரியின் முதல்வர் ஆஸ்வால்ட் கென்றியால் "ஆந்திர வேர்ட்ஸ்வொர்த்" என அழைக்கப்பட்டார். ஆதிவி பாபிராசு, தமருலா ராமா ராவ், ஆஸ்வால்ட் கென்றி மற்றும் கவிகொண்டல வெங்கடாராவ் ஆகியோர் நண்பர்களாவர். கவிகொண்டலா தமது பதினாறாம் வயதிலேயே ஆங்கிலத்தில் கவிதை எழுதத் தொடங்கினார். ஆனால் தெலுங்கில் பாடல்களை எழுதும்படி கேட்ரி அவரை ஊக்குவித்தார்.

மறைவு

தொகு

1969 சூலை நான்காம் நாள் அன்று கவிகொண்டல வெங்கட ராவ் குண்டூரில் இயற்கை எய்தினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிகொண்டல_வெங்கடராவ்&oldid=3738743" இலிருந்து மீள்விக்கப்பட்டது