கவிசென்றாய பெருமாள் கோயில்
கவிசென்றாய பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், எர்ரஅள்ளி என்ற சிற்றூரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயிலாகும்.
கவிசென்றாய பெருமாள் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | எர்ரஅள்ளி |
சட்டமன்றத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | சென்றாய பெருமாள் |
தாயார்: | இலட்சுமி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | குகை |
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலானது இயற்கையாக அமைந்த ஒரு குகையில் அமைந்துள்ளது. இதனாலேயே கவி என்ற முனொட்டு இறைவனின் பெயரின் முன்பு உள்ளது (இம்மாவட்ட வட்டாரவழக்கில் குகையை கவி என்பர்). குகையில் உள்ள சுயம்பு திருமேனிக்கு தற்காலத்தில் பெரிய அளவில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு முன்னதாக விநாயகர் அமைந்துள்ளார். கருவறையில் அருவுருவமான சுயம்பு திருமேனியின் பின்புறம் சென்றாய பெருமாளின் சிலை பிரதிட்டைச் செய்யப்பட்டுள்ளது.
வழிபாடு
தொகுசனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மிகச்சிறப்பாக வழிபாடு நடத்தப்படுகிறது. மேலும் வைகுண்ட ஏகாதசியன்று மிக விமரிசையாக வழிபாடு நடத்தப்படுகிறது.
அமைவிடம்
தொகுகிருஷ்ணகிரியில் இருந்து 18 கி.மீ தொலைவில் எர்ரஅள்ளி உள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.[1]