கவிநிலவு தர்மராஜ்

கவிநிலவு தர்மராஜ் (Kavinilavu Dharmaraj) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். ஈரோடு மாவட்டத்தினைச் சார்ந்த இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இவர், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். உடல்நலக் குறைவால் திசம்பர் மாதம் 11ஆம் நாள் 2006ஆம் ஆண்டு ஈரோட்டில் காலமானார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "🗳️ Kavinilavu Dharmaraj, Modakurichi Assembly Elections 1991 LIVE Results".
  2. Staff (2006-12-12). "Former AIADMK MLA Kavinilavu Dharmaraj passes away". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிநிலவு_தர்மராஜ்&oldid=3598290" இலிருந்து மீள்விக்கப்பட்டது