கவி சம்மேளனம்
கவி சம்மேளனம் ( Kavi sammelan ) என்பது வட இந்தியாவின் இந்தி பேசும் பகுதிகளிலுள்ள கவிஞர்கள் கூடும் கூட்டமாகும். பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் கவிதைகளை வாசித்து, இலக்கியப் பிரச்சினைகள் குறித்த பொதுவான விவாதத்தை நடத்துகிறார்கள். இது கவிஞர்களிடையே தனியே நடைபெறலாம் ஆனாலும் பெரும்பாலும் பார்வையாளர்களுக்கு முன்பாகவே செய்யப்படுகிறது. கவி சம்மேளனம் குறிப்பாக நகைச்சுவை மற்றும் நையாண்டி ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஹாஸ்ய கவி சம்மேளனம் என்றும் அறியப்படுகிறது.
வரலாறு
தொகுமுதல் மாபெரும் கவி சம்மேளனம் 1920 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல கவிஞர்களும் ஏராளமான பார்வையாளர்களும் இருந்தனர். அதன் பிறகு, கவி சம்மேளனம் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பெரிய பகுதியாக மாறியது. உருது கவிதைகளின் முஷைரா மற்றும் இந்தி கவி சம்மேளனம் ஆகியவை இப்போது அடிக்கடி இணைக்கப்படுகின்றன. மேலும் இந்துசுத்தானி மொழி பேசும் உலகம் முழுவதும் முஷைரா-கம்-கவி சம்மேளனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. [1]
இந்தியாவில், இந்தியச் சுதந்திரம் அடைந்த 1947 முதல் 1980-களின் முற்பகுதி வரையிலான காலம் கவி சம்மேளனத்திற்கான ஒரு பொற்காலம். 1980-களின் நடுப்பகுதியிலிருந்து 1990-களின் பிற்பகுதி வரை, இந்திய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர். இது தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற புதிய பொழுதுபோக்கு முறைகள் மற்றும் இந்தியத் திரைத்துறை வெளியீடுகளின் எண்ணிக்கையைப் போலவே கவி சம்மேளனத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. கவி சம்மேளனங்கள் இந்தியக் கலாச்சாரத்தில், அளவு மற்றும் தரம் இரண்டிலும் தங்கள் நிலையை இழக்கத் தொடங்கின.
பொருளாதார தாராளமயமாக்கலுக்கு முந்தைய சகாப்தத்தில் (1991), கவி சம்மேளனங்கள் அன்றாட வாழ்க்கையின் பிரபலமான பகுதியாக இருந்தன. அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷனின் பிற அலைவரிசிகளில் இவை அடிக்கடி ஒளிபரப்பப்பட்டன.
தாராளமயமாக்கலுக்குப் பின், அதிகரித்து வரும் மேற்கத்தியமயமாக்கல் மற்றும் மின்னணு ஊடகங்களின் பெருக்கம் ஆகியவற்றால், இதுபோன்ற கூட்டங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கவி சம்மேளனத்தில் காணப்பட்ட ஒரு நல்ல போக்கு என்னவென்றால், அது மற்ற நாடுகளிலும் வேரூன்றியுள்ளது. உலகம் முழுவதும் அதன் அதிர்வுகள் அதிகரித்து வருகிறது. மேலும், இப்போது பல இந்தியத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வா! வா! க்யா பாத் ஹை! போன்ற நிகழ்ச்சிகள், கவி சம்மேளன பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும் விருப்பத்துடன் ஒரு புதிய வாழ்க்கைக்கு கிடைத்துள்ளது.
இந்திய மற்றும் சர்வதேச அமைப்பாளர்கள்
தொகுஇந்தி கவி சம்மேளனங்கள் உலகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா,[2] [3] துபாய், [4] மஸ்கட், சிங்கப்பூர், [5] ஐக்கிய ராச்சியம் ஆகியவை இந்தியாவுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான காவி சம்மேளனங்களை நடத்துகின்றன. இந்த நாடுகளில் நடத்தப்படும் பெரும்பாலான கவி சம்மேளனங்களில், பொதுவாக இந்தியாவிலிருந்து கவிஞர்கள் அழைக்கப்படுகின்றனர்.
சான்றுகள்
தொகு- ↑ b, a. "c". The Times of India. http://photogallery.indiatimes.com/events/lucknow/kavi-sammelan-mushaira/articleshow/2951293.cms. பார்த்த நாள்: 30 December 2014.
- ↑ "HASYA KAVI SAMMELAN in Sunnyvale by Indo-American Community Service Center". Sfindian.com. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.
- ↑ "Evening With Laughter Kavi Sammelan at Jain Center, Buena Park, Los Angeles on 23 May, 2010 | Buy tickets online for Music & Concerts". Buzzintown.com. 2010-05-23. Archived from the original on 2012-07-24. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.
- ↑ "Indian Republic Day Kavi Sammelan and Mushaira 2009 to feature renowned poets from across India – Industry Press Releases". Arabianbusiness.com. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.
- ↑ "'Kavi sammelan' entertains Indian diaspora in Singapore". Hindustan Times. 2010-03-31. Archived from the original on 2011-11-06. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.