கவுரகரி நாயக்கு
கவுரகரி நாயக்கு (Gourahari Naik) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1959 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று கியோஞ்சார் மாவட்டத்தில் மது நாயக்கின் மகனாக இவர் பிறந்தார். ஒடிசா அரசியலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக செயல்பட்டார். ஒடிசா சட்டமன்றத்தில் பாட்னாவை சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று 12ஆவது மற்றும் 13ஆவது ஒடிசா சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில், பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக கவுரகரி நாயக்கு பாட்னா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் அவர் மொத்தம் 5,149 வாக்குகள் பெற்று 12-ஆவது ஒடிசா சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பத்மலோசன் சிங்கை 962 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2004 முதல் 2009 வரை இந்த சட்டமன்றத்தில் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "MLA Gourahari Naik Profile | PATNA Constituency". www.odishahelpline.com.
- ↑ "MLA Gourahari Naik Profile | PATNA Constituency". Archived from the original on 28 October 2017. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.