கவ்ரி தேவி (Gavri Devi) என்பவர் கவரி பாய் (14 ஏப்ரல் 1920 - 29 சூன் 1988) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவின் இராசத்தானை சேர்ந்த இந்திய நாட்டுப்புறப் பாடகி ஆவார்.[1][2][3] மாண்ட் பாடலைத் தவிர, இவர் தும்ரி, பஜன் மற்றும் கசல் ஆகியவற்றையும் பாடியுள்ளார். இவர் இராசத்தானின் மரு கோகிலா என்றும் அழைக்கப்பட்டார்.[1] கலை மற்றும் இசைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக 2013ஆம் ஆண்டில் இவருக்கு இராசத்தான் மாநில உயரிய குடிமக்கள் விருதான இராசத்தான் ரத்னா விருதினை இராசத்தான் அரசு இவருக்கு இவரது மரணத்திற்குப் பின் வழங்கி கௌரவித்தது.[4] [5]

கவ்ரி தேவி
பிறப்புகவ்ரி தேவி
(1920-04-14)14 ஏப்ரல் 1920
இறப்பு29 சூன் 1988(1988-06-29) (அகவை 68)
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்கவரி பாய்
பணிகிராமியப் பாடகி
குறிப்பிடத்தக்க படைப்புகள்மாண்ட் (பாடும் வகைகளுள் ஒன்று)
விருதுகள்இராசத்தான் ரத்னா (2013)
சங்கீத நாடக அகாதமி விருது (1986)

தனது 20 வயதில், ஜோத்பூரைச் சேர்ந்த மோகன்லால் கமேதி என்பவரைத் தேவி, திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் இருந்தார். சோத்பூரின் மகாராஜா உமைத் சிங்கிடமிருந்தும் இவரது இசையைத் தொடர ஊக்கம் பெற்றார். ஒடிசா, கருநாடகம், மகாராட்டிரம், கோவா, வங்காளம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் உட்பட இந்தியா முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.[1]

1957ஆம் ஆண்டில், கவ்ரி தேவி வானொலி மற்றும் தூர்தர்ஷனில் மாண்ட் பாடும் நிகழ்ச்சியை வழங்கத் தொடங்கினார். இது மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் இராசத்தான் அரசின் சுற்றுலாத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் இவர் மாண்ட் பாடும் நிகழ்ச்சியை வழங்கினார். 1983ஆம் ஆண்டில், உருசியாவின் மாஸ்கோவில், இந்தியாவால் ஏற்பாடு செய்யப்படும் இந்திய விழாவில் கேசரியா பலம் ஆவோ ஹமாரே தேஸ்' என்ற சிறப்பு நிகழ்ச்சியை வழங்கினார். இவர் 1980-ல் ஆசியாவில் யார் யார் பட்டியலில் இடம்பிடித்தார்.

விருது தொகு

1986ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்குச் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கி கௌரவித்தது. இது நாட்டுப்புற இசையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காகப் பயிற்சி கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த இந்திய அங்கீகாரமாகும்.[6] இந்த விருதை அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் இரா. வெங்கட்ராமன் வழங்கினார்.[1]

இறப்பு தொகு

கவ்ரி தேவி 29 சூன் 1988-ல் இறந்தார் [7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Sharma, Nandkishor (29 June 2020). "हजारों दुख सहे लेकिन मांड गायकी से बनाई देश-दुनिया में पहचान". Patrika.com. https://www.patrika.com/jodhpur-news/rajasthan-ratna-maand-singer-maru-kokila-gavri-devi-6230767/. 
  2. Rājasthāna vārshikī. Pañcagaṅgā Prakāśana. 1997. பக். 9. https://www.google.co.in/books/edition/R%C4%81jasth%C4%81na_v%C4%81rshik%C4%AB/8zFuAAAAMAAJ?gbpv=1&bsq=%E0%A4%97%E0%A4%B5%E0%A4%B0%E0%A5%80+%E0%A4%A6%E0%A5%87%E0%A4%B5%E0%A5%80+%E0%A4%AE%E0%A4%BE%E0%A4%82%E0%A4%A1+%E0%A4%97%E0%A4%BE%E0%A4%AF%E0%A4%BF%E0%A4%95%E0%A4%BE&printsec=frontcover. 
  3. Rāmasiṃha Solaṅkī; Sukhvir Singh Gahlot (1997). Jodhapura mahilā samāja [लोक संगीत गायिका गवरी देवी]. Jodhapura Mahilā Samāja. பக். 16, 17, 18. https://www.google.co.in/books/edition/Jodhapura_mahil%C4%81_sam%C4%81ja/8lUKAAAAIAAJ?gbpv=1&bsq=%E0%A4%97%E0%A4%B5%E0%A4%B0%E0%A5%80+%E0%A4%A6%E0%A5%87%E0%A4%B5%E0%A5%80+%E0%A4%AE%E0%A4%BE%E0%A4%82%E0%A4%A1+%E0%A4%97%E0%A4%BE%E0%A4%AF%E0%A4%BF%E0%A4%95%E0%A4%BE&printsec=frontcover. 
  4. "Rajsthan Ratan award for 2013". Ibn live இம் மூலத்தில் இருந்து 2013-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130924065540/http://ibnlive.in.com/news/govt-selects-7-persons-for-rajasthan-ratna-award-2013/414669-3-239.html. 
  5. "Gavri Devi gets Rajasthan Ratna Award 2013". Rajasthan gk.net. https://www.rajasthangk.net/2013/09/gavri-devi-gets-rajasthan-ratna-award.html. 
  6. "Sangeet Natak Akademi Puraskar (Akademi Awards)". Sangeetnatak.org. 27 July 2011. https://sangeetnatak.org/sna/awardeeslist.htm. 
  7. "मांड गायिका गवरी नहीं रहीं". Dainik Jagran. 30 June 1988. https://www.facebook.com/gavridevimaandsinger/photos/ms.c.eJw10MkNBEEIA8CMVhgwR~;6JraCZZ8ngPrS0nV5IqnX~;dBzCtesZXY7q9rPl5pAzY3PmuWRyjXOKrf32Eznz1XEOnRzF53rz~_OYLTSl64Ow1~_xnffOz9Je~;~_Dazt~_jt09g11bh9rvZxi28fkufe9xDufQCCJMpztGZ~;Z46zXT1Wbfrn~;oMn2mVyf~_b5f4853F0p5ufwByhZRiw~-~-.bps.a.282945441752403/282948195085461. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவ்ரி_தேவி&oldid=3662931" இலிருந்து மீள்விக்கப்பட்டது