கஸ்தர் திருவிழா

லடாக்கில் கொண்டாடப்படும் திபெத்திய பௌத்த திருவிழா

கஸ்தர் திருவிழா (Gustor Festival ) என்பது இந்திய ஒன்றிய நிர்வாகப் பகுதியான லடாக்கின் வெவ்வேறு மடங்களில் கொண்டாடப்படுகிறது. இது திக்சே, இசுபிடுக், கோர்சோக் மற்றும் கர்ஷா போன்ற பல்வேறு மடங்களால் கொண்டாடப்படுகிறது.

கஸ்தர் திருவிழா
இசுபிடக் மடாலயத்தில் 2018இல் நடைபெற்ற கஸ்தர் விழாவின் போது நிகழ்த்தப்பட்ட சாம் நடனம்
கடைபிடிப்போர்பௌத்தர்கள்
வகைமத விழா
புத்தாண்டு
நினைவேந்தல்
முக்கியத்துவம்லடாக்கிய புத்தாண்டில் அமைதி மற்றும் செழுமைக்காக கொண்டாடப்படுகிறது
தொடக்கம்பிப்ரவரி
முடிவுபிப்ரவரி
நாள்ஒவ்வொரு வருடமும் திபெத்திய நாட்காட்டியின் 11வது மாதத்தின் 28வது மற்றும் 29வது நாள்
2023 இல் நாள்19–20 ஜனவரி

கஸ்தர் ( གུ་གཏོར / གུ་སྟོར ) என்ற வார்த்தையின் அர்த்தம் திபெத்திய மொழியில் '29 வது நாள் தியாகம்' என்பதாகும். [1] இவ்விழா பல்வேறு வகையான சமயச் சடங்குகள், இசை மற்றும் சாம் நடனத்துடன் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

திக்சே கஸ்தர் திருவிழா

தொகு

திக்சே மடாலயத்தில் திக்சே கஸ்தர் திருவிழா (அக்டோபர்-நவம்பர்) திபெத்திய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதத்தின் 17 முதல் 19 ஆம் நாள் வரை நடைபெறும்.[2][3]

கோர்சோக் கஸ்தர் திருவிழா

தொகு

கோர்சோக் மடாலயத்தில் கோர்சோக் கஸ்தர் திருவிழா ஜூலை மாதம் நடைபெறுகிறது. பல சாங்-பா, திபெத்திய பீடபூமி நாடோடி மேய்ப்பர்கள் இந்த திருவிழாவில் கலந்துகொள்கிறார்கள்.[4] கோர்சோக் கஸ்தர் திருவிழாவில், லாமா நடனக் கலைஞர்கள் தர்மபாலர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகமூடிகளை அணிவார்கள். தர்மபாலர்கள் பௌத்த தேவாலயத்தின் காவல் தெய்வங்கள். அவர்கள் திபெத்திய பௌத்தத்தின் துருக்பா பிரிவின் புரவலர் தெய்வங்கள். [4]

கர்ஷா கஸ்தர் திருவிழா

தொகு

கர்ஷா மடாலயத்தில் கர்ஷா கஸ்தர் திருவிழா ஜூலை மாதத்தில் வரும் 6 வது திபெத்திய மாதத்தின் 27 மற்றும் 28 வது நாட்களில் நடைபெறுகிறது. கர்ஷா (ஜன்ஸ்காரில் உள்ள மிகப்பெரிய மடாலயம்). இந்த திருவிழாவில் முகமூடி நடனம், வினோதமான இசை மற்றும் ஆன்மீக மந்திரங்களுடன் இரண்டு நாட்கள் தொடரும். [1][3][5]

இசுடோன்டே கஸ்டர் திருவிழா

தொகு

இசுடோண்டே மடாலயத்தில் இசுடோண்டே கஸ்தர் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் தேதிகள் திபெத்திய நாட்காட்டியைப் பொறுத்தது. ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறுபடும் ஆனால் பெரும்பாலும் ஜூலையில் நடைபெறும்.[5]

அட்டவணை

தொகு

லடாக் திபெத்திய சந்திர நாட்காட்டியைப் பின்பற்றுவதால் மற்றும் கஸ்தர் திருவிழா திபெத்திய நாட்காட்டியின் 11 மாதத்தின் 28 மற்றும் 29 வது நாட்களில் வருகிறது, ஒவ்வொரு ஆண்டும் திருவிழா கிரிகொரியன் நாட்காட்டியின் வெவ்வேறு தேதிகளில் வருகிறது.

ஆண்டு தேதி
2021 11-12 ஜனவரி
2022 30-31 ஜனவரி
2023 19-20 ஜனவரி
2024
2025
2026
2027

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 India 2017 YEARBOOK (First ed.). McGraw Hill Education. 2017. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9352605682. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.
  2. Ladakh Through the Ages. Indus Publishing Company. 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185182759. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.
  3. 3.0 3.1 Amazing Land Ladakh. Indus Publishing Company. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173871863. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.
  4. 4.0 4.1 "Korzok Gustor Festival". Footloose India. 2007. பார்க்கப்பட்ட நாள் 1 September 2008.
  5. 5.0 5.1 Mohd Hamza (25 June 2019). The Dreamland: Discover Unexplored Kargil (Ladakh). Notion Press. pp. 35–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-64546-837-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்தர்_திருவிழா&oldid=3954391" இலிருந்து மீள்விக்கப்பட்டது