கா (சொல்)

(கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)


கா என்பது பொருட்களைத் தோளில் காவிச்செல்வதற்குப் பயன்படும் நீண்ட கோல் போன்ற கருவியைக் குறிக்கும் சொல். பொதுவாக இலங்கையின் மட்டக்களப்புப் பகுதியிலும் தென்னிலங்கையின் மதுராபுரி போன்ற இடங்களிலும் இச்சொல் பண்டைக் காலந்தொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

"கா" மூலம் பொருட்கள் சுமந்து செல்லப்படுகின்றன.

மட்டக்களப்பின் பேச்சுத் தமிழிலும் "என்னகா!", "வாகா!", "போகா" போன்ற பதங்களைப் பயன்படுத்துவர். இதனால் "ஆடவர் தோளிலும் கா அரிவையர் வாயிலும் கா" என வேற்றூர் கவிஞர் ஒருவர் பாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கா_(சொல்)&oldid=1918319" இலிருந்து மீள்விக்கப்பட்டது