காஃகுமானு
எலிசபெத் காஃகுமானு (Elizabeth Kaʻahumanu) (மார்ச்சு 17, 1768–சூன் 5, 1832) ஹவாய் இராச்சியத்தின் இணை அரசராகவும் காமேஃகாமெகா I அரசரின் மனைவியாகவும் இருந்தவர். அரசரின் மிகவும் விரும்பப்பட்ட மனைவியாகவும் மிகுந்த அரசியல் செல்வாக்குப் பெற்றவராகவும் விளங்கினார். தனது கணவரின் மறைவிற்குப் பிறகு, அரசிகள் கோலோச்ச முடியாத ஹவாய் இராச்சியத்தில் தனது மகனுடன் இணைந்து ஆட்சி செய்ய, மறைந்த அரசரின் விருப்பம் என அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, குஹினா நுயை என்ற புதிய பதவியை உருவாக்கி ஆட்சி புரிந்தவர்.
காஃகுமானு | |||||
---|---|---|---|---|---|
ஹவாய் அரசி | |||||
ஹவாயின் (ஆட்சி செய்யாத) அரசி | |||||
ஆட்சிக்காலம் | 1795–1819 | ||||
முன்னையவர் | இல்லை பின்னர் கெகுயபோய்வா லிலிகா | ||||
பின்னையவர் | அரசி காமமாலு | ||||
காயுயையின் பட்டத்து அரசி | |||||
ஆட்சிக்காலம் | முதல்முறை ஆட்சி இரண்டாம்முறை ஆட்சி | ||||
முன்னையவர் | டேபோரா கபுலே | ||||
பின்னையவர் | ஒழிக்கப்பட்டது | ||||
ஆட்சிக்காலம் | 1821–1832 | ||||
குஹினா நுயை | |||||
ஆட்சிக்காலம் | மே 20, 1819 – சூன் 5, 1832 (13 ஆண்டுகள், 16 நாட்கள்) | ||||
முன்னையவர் | புது உருவாக்கம் | ||||
பின்னையவர் | காஃகுமானு II | ||||
பிறப்பு | ஹவாயின் ஹனா பகுதி குகை ஒன்றில் | மார்ச்சு 17, 1768||||
இறப்பு | சூன் 5, 1832 ஹொனலுலு அருகே | (அகவை 64)||||
புதைத்த இடம் | ஹவாயின் அரச கல்லறை | ||||
துணைவர் | காமேஃகாமெகா I கௌமுவாலீ கீலீய்கோநுயை | ||||
| |||||
மரபு | காமெஃகாமெகா கேகௌலிகே | ||||
தந்தை | கீயௌமோகு II பாபையகியகி | ||||
தாய் | நமஹன |
ஒரே மேசையில் ஆண்களுடன் பெண்கள் உண்ண இயலாத சமூகத்தில் தனது அரசிளங்குமரனுடன் ஒரே மேசையில் உணவருந்தி "உணவுண்ணும் விடுதலை"யை ஹவாயில் தனதாட்சியின்போது பெற்றுத் தந்தார்.சீர்திருத்தத் திருச்சபையில் 1824ஆம் ஆண்டு சேர்ந்த காஃகுமானு தனது நாட்டுமக்களையும் மதம் மாற வற்புறுத்தினார்.பத்துக் கட்டளைகளின் அடிப்படையில் ஹவாய் சட்டங்களை இயற்றினார். தனது மதக்குருமார்களின் உந்துதலால் ஹொனலுலுவில் இருந்த ரோமன் கத்தோலிக்க மாதாகோவிலை மூடச்செய்தார். கத்தோலிக்க மதத்தை பின்பற்றுவதை தடையும் செய்தார். ஐக்கிய அமெரிக்காவடன் நல்லிணக்க உடன்பாடு கொண்டிருந்தார்.
வெளியிணைப்புகள்
தொகு- Ka‘Ahumanu
- Ka‘Ahumanu — Powerful Queen பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்