காஃவீன்
காஃவீன் (Caffeine, காஃபீன்) என்பது சில செடிகொடிகளில் உள்ள மனிதர்களுக்கு ஒரு புத்துணர்வூட்டும் (விறுவிறுப்பூட்டும்) ஒரு பொருள் (போதைப் பொருள்). இது காப்பியில் இருப்பதை முதலில் உணர்ந்ததால் இதற்கு காஃவீன் என்று இத்தாலிய மொழிவழி இப்பெயர் ஏற்பட்டது. இதே பொருள் பிற செடிகொடிகளில் இருந்து பெறும்பொழுது வேறு பெயர் கொண்டாலும் இதன் வேதியியல் பெயர் காஃவீன் (Caffeine) என்பதுதான். பிற செடிகளில் இருந்து பெறும் பொருள்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்: தேயிலைச் செடியில் இருந்து பெறுவதை தேயீன் (theine) என்றும், குவாரான் என்னும் செடியில் இருந்து பெறுவதை குவாரைன் (guaranine) என்றும், யெர்பா மேட் என்னும் செடிப்பொருளில் இருந்து பெறுவதை மேட்டீன்(mateine) என்றும் கூறுவது வழக்கம்.
காஃவீன் என்னும் வேதிப்பொருள் ஏறத்தாழ 60 செடிகொடிகளில் காணப்படுகின்றது. இது சில சூழல்களில் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகின்றது. இது மனிதர்களுக்கு பழக்க அடிமைத்தனம் ஊட்டும் பொருள்களின் ஒன்றாக கருதப்படுகின்றது. இப்பொருளின் மூலக்கூற்றில் நான்கு நைட்ரஜன் அணுக்களும் இரண்டு ஆக்சிசன் அணுக்களும், மூன்று மெத்தில் (CH3) குழுக்களும் உள்ளன.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Institute of Medicine (US) Committee on Military Nutrition Research (2001). "2, Pharmacology of Caffeine". Pharmacology of Caffeine (in ஆங்கிலம்). National Academies Press (US). Archived from the original on 28 September 2021. பார்க்கப்பட்ட நாள் 15 December 2022.
- ↑ "Caffeine". DrugBank. University of Alberta. 16 September 2013. Archived from the original on 4 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
- ↑ "Caffeine augments the antidepressant-like activity of mianserin and agomelatine in forced swim and tail suspension tests in mice". Pharmacological Reports 68 (1): 56–61. February 2016. doi:10.1016/j.pharep.2015.06.138. பப்மெட்:26721352.