காங்கிலு (நடனம்)

காங்கிலு (Kangilu) அல்லது கங்கீலு (Kangeelu ) என்பது இந்தியாவின் கர்நாடக சமூகங்களுக்கு குறிப்பாக உடுப்பிபகுதி மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாரம்பரிய நாட்டுப்புற நடனம் ஆகும். இது மண்டல் சமூகத்தால் நிகழ்த்தப்படும் ஒரு ஆன்மீக நாட்டுப்புற நடன வடிவமாகும். [1][2] முழு நிலவு நாளில் மட்டுமே நிகழ்த்தப்படும் இது நோய், தீய சக்திகள் மற்றும் பிற எதிர்மறை ஆற்றல்களைத் தவிர்ப்பதற்கும், அமைதி, நல்லிணக்கம் மற்றும் சமூக உணர்வை வளர்ப்பதற்கும் பயன்படுவதாக நம்பப்படுகிறது. கங்கேலு என்பது வெறும் நடனம் மட்டுமல்ல, ஐந்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஒரே மாதிரியான உடைகளையும் ஒப்பனையையும் அணிந்து நடத்தும் ஒரு நடனச் செயலாகும். [2]

கங்கேலு நடனம்

நடன வடிவம்

தொகு

துளு மொழியில் "காங்" என்றால் பாக்கு மரம் என்று பொருள்படும். அதற்கேற்ப நடனக் கலைஞர்களும் பாக்கு நாரால் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்து ஆடுவதால் இந்த நடனம் இப்பெயரைப் பெற்றுள்ளது. இந்த நடனம் துளுவ நாட்காட்டியின் (மார்ச் மாதத்தில்) மாய் மாதத்தின் முழுநிலவு நாளில் (பௌர்ணமி) நிகழ்த்தப்படுகிறது.

வேகமான மற்றும் விரைவான தாளங்கள், சக்திவாய்ந்த மற்றும் அழகான நடன அசைவுகள் மற்றும் படிகளுடன் குழு உறுப்பினர்களுடன் சரியான ஒத்திசைவு போன்ற அனைத்து நாட்டுப்புற நடனங்களிலும் இருக்கும் அதே தன்மையுடன் இதுவும் வியக்கத்தக்க நடன நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. காங்கிலு நடனத்திற்கு முன், நடனக்கலைஞர்கள் தங்கள் தெய்வமான கடகேஸ்வரி அல்லது துர்காவை வணங்கி, பின்னரே தலைப்பாகை அல்லது பாக்கு கீற்றுகளால் ஆன தலைக்கவசத்தையும் அணிகிறார்கள்[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "About". Tulunadu.jigsy.com. பார்க்கப்பட்ட நாள் 21 September 2018.
  2. 2.0 2.1 "Kangilu Dance Form of Udupi, Traditional Folk Dance of Udupi". Udupilive.in. பார்க்கப்பட்ட நாள் 21 September 2018.
  3. "காங்கிலு நாலிகே".
"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்கிலு_(நடனம்)&oldid=3937125" இலிருந்து மீள்விக்கப்பட்டது