காசிநாத் யாதவ்
காசிநாத் யாதவ் (Kashinath Yadav), உத்தரப்பிரதேசத்தின் காசீபூரைச் சேர்ந்த இந்திய நாட்டுப்புறப் பாடகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் அகிர் சமூகங்களின் இனப் போச்புரி நாட்டுப்புற வகையான பிரகாவைப் பாடுவதில் பிரபலமானவர். சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் உத்தரப்பிரதேச அரசில் இணை அமைச்சராக பதவி வகித்தார்.[1] உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் ஆதரவுடன் முதல் முறையாகச் சட்ட மேலவை உறுப்பினர் ஆனார். பின்னர் காசிநாத், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். சமாஜ்வாதி கட்சியிலிருந்து இரண்டு முறை உ. பி.யின் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.[2] இவர் மார்ச் 2021-ல் சமாஜ்வாதி கட்சியின் கலாச்சாரப் பிரிவின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[3].
செப்டம்பர் 2016-ல், முதல்வர் அகிலேஷ் யாதவ் பதவி விலகியபோது இவர், உ.பி.யின் ராஜ்ய கிருஷி உத்பதன் மண்டி பரிசத்தின் (உத்தரப்பிரதேச மாநில விவசாய உற்பத்தி சந்தை வாரியம்) தலைவராக நியமிக்கப்பட்டார்.[4]
இவர் முலாயம் சிங் யாதவுக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.[4] யாதவ் உத்தரப்பிரதேச அரசின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.[4] இசைத் துறையில் இவரது சிறந்த பங்களிப்பிற்காக 2016ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச அரசின் மிக உயர்ந்த குடிமகன் விருதான யாஷ் பார்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Mishra, Sarveshwari (October 13, 2017). "सपा के पूर्व राज्य मंत्री ने बिरहा गाकर बताया बेटियों का महत्व" (in Hindi). Patrika.com. https://www.patrika.com/ghazipur-news/ex-sp-minister-kashinath-yadav-telling-importance-of-daughter-by-birha-1902438/.
- ↑ "विजय को एमएलसी की उम्मीदवारी" (in Hindi). Dainik Jagran. April 6, 2012. https://www.jagran.com/uttar-pradesh/ghazipur-9105619.html.
- ↑ "सपा ने काशीनाथ यादव को सांस्कृतिक प्रकोष्ठ का राष्ट्रीय अध्यक्ष किया घोषित" (in Hindi). Livehindustan.com. March 22, 2021 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 8, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230208093843/https://smart.livehindustan.com/lucknow/news/samajwadi-party-declares-kashinath-yadav-name-for-sp-national-president-of-cultural-cell-81616402784519.html.
- ↑ 4.0 4.1 4.2 "CM अखिलेश ने दिया मंडी परिषद के चेयरमैन पद से इस्तीफा, काशीनाथ यादव को मिली जिम्मेदारी" (in Hindi). News18. September 22, 2018. https://hindi.news18.com/news/uttar-pradesh/lucknow-chief-minister-akhilesh-yadav-resigned-from-mandi-parishad-president-post-908167.html.
- ↑ "54 eminent persons named for UP's 'Yash Bharti' awards". பிசினஸ் ஸ்டாண்டர்ட். October 23, 2016. https://www.business-standard.com/article/news-ians/54-eminent-persons-named-for-up-s-yash-bharti-awards-116102300494_1.html.