காசிரங்கா யானைத் திருவிழா
காசிரங்கா யானைத் திருவிழா (Kaziranga Elephant Festival) என்பது ஆசிய யானைகளைப் பாதுகாக்கவும் அவற்றின் நலம் காக்கவும் ஒவ்வோர் ஆண்டும் அசாம் மாநிலத்திலுள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் நடத்தப்படுகின்ற திருவிழாவாகும். அசாம் மாநில வனத்துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து இத்திருவிழாவை நடத்துகின்றன. நாளுக்கு நாள் பெருகி வரும் மனிதர் மற்றும் யானைகள் இடையிலான சச்சரவுகளுக்கு தீர்வுகாண முற்படுவது இவ்விழா கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாகும்.[1][2][3] தலை முதல் பாதம்வரை அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆசிய யானைகள் இவ்விழாவில் பங்கேற்கின்றன. அணிவகுப்பு , ஓட்டப்பந்தயம், கால்பந்து, நடனம் என பல்வேறு வகையான போட்டிகளில் அவை பங்கேற்று பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றன.
காசிரங்கா யானைத் திருவிழா Kaziranga Elephant Festival | |
---|---|
2009 ஆம் ஆண்டு ஏழாவது காசிரங்கா யானைத் திருவிழாவில் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் யானைகள். | |
நாட்கள் | பிப்ரவரி |
காலப்பகுதி | ஒவ்வோர் ஆண்டும் |
அமைவிடம்(கள்) | காசிரங்கா அசாம் |
துவக்கம் | 2002 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Elephant Festival". North East India. Archived from the original on 6 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 21 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Elephant Festival – A Lifetime opportunity". Incredible Northeast India. Archived from the original on 18 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 21 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Elephant Festival". Bharat Online. பார்க்கப்பட்ட நாள் 21 February 2010.