காசி ராவ் ஓல்கர்
காசி ராவ் ஓல்கர் (Kashi Rao Holkar) (1767 ஏப்ரல் - 1808 க்கு முன்பு) இவர் மராட்டியர்களின் ஓல்கர் வம்சத்தைச் சேர்ந்த இந்தோரின் மகாராஜாவாக 1797 முதல் 1799 வரை ஆட்சி புரிந்தார். இவர் துக்கோஜி ராவ் ஓல்கரின் முதல் மனைவியின் மூலம் பிறந்த மூத்த மகனாவார்.
காசி ராவ் ஓல்கர் | |
---|---|
இந்தோரின்) மகாராஜா | |
காசி ராவ் ஓல்கர் | |
ஆட்சி | 1797 - 1799 |
பின்வந்தவர் | காந்தாராவ் ஓல்கர் |
தந்தை | துகோசி ராவ் ஓல்கர் |
பிறப்பு | 1767 ஏப்ரலுக்கு முன்னர் |
இறப்பு | 1808 |
சமயம் | இந்து சமயம் |
வாழ்க்கை
தொகுதுகோஜி ராவின் மரணம் ஓல்கர்களின் நலன்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. ஏனெனில் இது அவரது நான்கு மகன்களான காசி ராவ் ஓல்கர், மல்கர் ராவ் ஓல்கர் யசுவந்த் ராவ் ஓல்கர் மற்றும் வித்தோஜி ராவ் ஓல்கர் ஆகியோருக்கு இடையே நீண்ட கால மோதல்கள் தொடங்கியதைக் குறிக்கிறது. ஆனால் ஓல்கர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, துகோஜிராவ் காசி ராவ் மற்றும் மல்கர் ராவ் என்ற இரண்டு மகன்களை விட்டுச்சென்றார்.
துகோஜி ராவ் புனேவில் வசித்து வந்தபோது, காசி ராவை தனது வாரிசாக அறிவித்தார். ஆனால் காசி ராவ் ஊனமுற்றவராகவும் மற்றும் ஒழுக்கமில்லாதவராகவும் இருந்தார். இந்த காரணத்தினால், பொதுமக்களும் வீரர்களும் காசி ராவை விரும்பவில்லை, மல்கர் ராவை ஒரு ஆட்சியாளராக விரும்பினர். மல்கர் ராவ் ஒரு நல்ல நிர்வாகியாகவும் மற்றும் ஒரு நல்ல இராணுவத் தலைவராக இருந்ததால், மல்கர் ராவ், வித்தோஜி ராவ் மற்றும் யசுவந்த் ராவ் ஆகியோர் காசி ராவை எதிர்த்தனர். மேலும் துகோஜி ராவிற்குப் பின் வந்த ஓல்கர் வம்சத்தின் தலைவராக மல்கர் ராவ் இருக்க வேண்டும் என்றும் விரும்பினர்.
காசி ராவ் புத்திசாலித்தனம் குறைந்தவராக இருந்தார். அதே சமயம் இவரது சகோதரர் மல்கர் ராவ் இவருக்கு எதிராக நல்ல அறிவாற்றலுடன் இருந்தார். மலகர் ராவ் 1791-92 ஆம் ஆண்டில், ஓல்கர்களுக்கும் பிற அண்டை தலைவர்களுக்கும் சொந்தமான நிலங்களை அழிவிற்கு உட்படுத்தியதன் மூலம் பெரும் சிக்கலை ஏற்படுத்தினார். மல்கர் ராவ் இறுதியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டார்.
1799 பிப்ரவரியில் ஓல்கர் இராச்சியத்தின் ஆறாவது ஆட்சியாளராக காசிராவ் வெற்றி பெற்றார்.