மல்கர் ராவ் ஓல்கர்

மல்கர் ராவ் ஓல்கர் (16 மார்ச்சு 1693 – 20 மே 1766) மராட்டிய பேரரசின் குறிப்பிடத்தக்க மன்னர் ஆவார். மல்கர் ராவ், மராத்தா வழியில் வந்து, மத்திய இந்தியாவிலுள்ள மல்வாவின் முதல் சுபேதர் ஆவார். ஓல்கர் வம்சத்தில் வந்த இந்தூரின் முதல் அரசரும் இவரே. மராத்தா அரசை வட இந்திய பகுதிகளில் கொண்டு சேர்த்தவரும், பேஷ்வாக்களிடம் இருந்து இந்தூரை ஆள்வதற்காக பெற்றவரும் இவரே.

மல்கர் ராவ் ஓல்கர்
மல்ஹர் ராவ் ஹோல்கரின் தகடு புனேவில் உள்ள சனிவார் வாடாவுக்கு வெளியே உள்ளது
பிறப்பு16 மார்ச்சு 1693
சேசுரீ, புனே
இறப்பு20 மே 1766
சார்பு மராட்டிய பேரரசு
தரம்சுபேதார் /பேஷ்வாக்களின் முதல்நிலை அதிகாரி[1]
உறவினர்பாய் சாகிப் ஓல்கர் (மனைவி)
பனா பாய் சாகிப் ஓல்கர் (மனைவி)
துவார்கா பாய் சாகிப் ஓல்கர் (மனைவி)
அர்கு பாய் சாகிப் ஓல்கர் (மனைவி)
கண்டேராவ் ஓல்கர் (மகன்)
அகில்யாபாய் ஓல்கர் (மருமகள்)
இரண்டாம் மாலேராவ் ஓல்கர் (பேரன்)
இரு மகள்கள்
போசிராசுராவ் பார்கல் (மாமா)

இறப்பு

தொகு

1766-ம் ஆண்டு மே 20-ம் நாள் ஆலம்பூரில் இறந்தார். இவருக்கு பிறகு இவருடைய மருமகள், அகில்யாபாய் ஓல்கர் ஆட்சியில் அமர்ந்தார். மல்கர் ராவுடைய கல்லறை மத்திய பிரதேசத்திலுள்ள ஆலம்பூரில் உள்ளது.

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Hindustancha Yugpurush Malharrao Holkar By Madhukar Salgare - 2009(Marathi)
  • Subhedar Thorale Malharrao Holkar Yanche Charitra By M.M. Atre - 1893 (Marathi)
  • Peshwa Maratha Relations and Malharrao Holkar By N.N. Nagarale 1989 (English)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்கர்_ராவ்_ஓல்கர்&oldid=3529553" இலிருந்து மீள்விக்கப்பட்டது