பண பலகை அல்லது காசு பலகை என்பது நாணயங்களை எண்ணுவதற்கு உபயோகப்படுத்தப்பட்ட மர பலகையாகும். [1] மரப்பலகையில் 50,100 என காசுகளின் அளவிலான குழிகள் தேவைக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கும். ஒருமுறை அக்குழிகளில் காசுகளை இட்ட பிறகு 50 காசுகள், நூறுகாசுகள் என ஒருசேர எண்ண ஏதுவாக இந்த பலகைகள் பயன்படுத்தப்பட்டன. காசு குவியல்களுக்குள் இந்த காசு பலகையை விட்டு சலிப்பது போல காசுகளை பலகையின் மேற்புறத்தில் தடவினால் குழிகளுக்குள் காசுகள் நிரம்பிவிடும், இவ்வாறு நிரம்பும் போது விடுபட்ட சில குழிகளில் காசுகளை நிரப்பி முழுமையான எண்ணைக்கை விரைவாகவும், சரியாகவும் கூறப்பட பயன்பட்டுள்ளது.

வெவ்வேறு அளவுள்ள நாணயங்களுக்கு தனித்தனி காசு பலகைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

திருவிதாங்கூர் சமஸ்தான காசு பலகைகள்

தொகு

19 ஆம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு ரூபாய் பணம் என்பது 28 சக்ரம் நாணயங்கள் இணைந்ததாகும். இந்நாணயங்களை எண்ணுவதற்காக 28 குழிகள் கொண்ட காசு பலகைகள் உருவாக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் காசு பலகைகள் செம்மரங்களால் ஆனவை. இதனை அளவு பலகை என்று அழைத்துள்ளனர். திருவிதாங்கூர் அரச காசுகள் மிக சிறியதாக இருந்துள்ளன. எனவே அவற்றை துள்ளியமாக காசு பலகைகள் உதவின[2]

28 குழிகள் கொண்ட காசு பலகை சக்ர நாணயங்களை எண்ணுவதற்காகவும், 100 குழிகளைக் கொண்ட காசு பலகை பணம் நாணங்களை எண்ணுவதற்காகவும், 300 குழிகளை கொண்ட காசு பலகை காசு நாணயங்களை எண்ணுவதற்காகவும், 400 குழிகளை கொண்ட காசு பலகை வெள்ளி சக்ர நாணயங்களை எண்ணவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. https://www.napiermuseum.org/artifacts/coins/coin-pana-palaka/125
  2. https://www.michaelbackmanltd.com/archived_objects/travancore-chukram-counter/
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசு_பலகை&oldid=3694542" இலிருந்து மீள்விக்கப்பட்டது