காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில்

காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் (மதங்கேசம்) என்றழைக்கப்படும் இது, காஞ்சியிலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். மேலும், நந்திவர்ம பல்லவன் காலத்தியது. மிகவும் பழமையான இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளன.[1]

காஞ்சிபுரம் மதங்கேசம்.
காஞ்சிபுரம் மதங்கேசம். is located in தமிழ் நாடு
காஞ்சிபுரம் மதங்கேசம்.
காஞ்சிபுரம் மதங்கேசம்.
மதங்கீசுவரர் கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:12°50′08″N 79°42′30″E / 12.835640°N 79.708301°E / 12.835640; 79.708301
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் மதங்கேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மதங்கீஸ்வரர்.
வரலாறு
தொன்மை:கற்றளி அமைப்பு.

இறைவர், வழிபட்டோர்

தொகு
  • இறைவர்: மதங்கீஸ்வரர்.
  • தொன்மை: கோயில் கற்றளி அமைப்பு.
  • வழிபட்டோர்: மதங்க முனிவர்.

தல வரலாறு

தொகு

மதங்க முனிவர் இப்பெருமானை வழிபட்டு ஐம்புலன்களையும் அடக்கியாளும் ஆற்றலைப் பெற்றார் என்று இத்தல வரலாற்றில் சொல்லப்படுகிறது.[2]

தல விளக்கம்

தொகு

மதங்கேசம் எனும் இது, ஐம்புலக் குறும்புகளை அடக்கவேண்டி மதங்க முனிவர் அருச்சித்த மதங்கேசர் கோயில் மதங்கேசர் தெரு மிசின் மருத்துவமனைக் கெதிரில் மேற்கு நோக்கிய திருமுன்பொடும் விளங்குகின்றது. பல்லவர்காலச் சிற்பங்கள் அமைந்து அரசியலால் காக்கப்படுகிறது.[3]

தல பதிகம்

தொகு
  • பாடல்: (மதங்கேசம், அபிராமேசம்)
விதந்த மற்றிதன் வடக்கது வெம்புலன் அடங்க
மதங்க மாமுனி அருச்சனை புரிமதங் கேசம்
அதன்கு டக்கபி ராமேசம் அச்சுதன் குறளாய்ச்
சிதைந்து மாவலி தபத்தெற வழுத்திய வரைப்பு.
  • பொழிப்புரை:
எடுத்தோதிய இம்முக்கால ஞானேசத்தினுக்கு வடக்கில் உள்ளது
கொடிய ஐம்புலன்களுமடங்க மதங்கமாமுனிவர் வழிபாடு செய்த மதங்கேசம்;
அதற்கு மேற்கில் திருமால் வாமனவடிவினனாய் மாவலி சிதைந்துகெடும்படி
அழிக்கத் துதிசெய்த தலம் அபிராமேசம் உள்ளது..[4]

அமைவிடம்

தொகு

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் நடுப்பகுதியில் மதங்கீஸ்வரர் கோயில், பெரிய காஞ்சிபுரத்தில் ஆசுபிடல் ரோடு மிசின் மருத்துவமனைக்கு வடகிழக்கில் சாலைக்கு வடவண்டையில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் கிழக்கு திசையில், மேற்கு பார்த்த சன்னதியாக இக்கோவில் அமைந்துள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் பாகம் 1b | 20 அரிசாப பயம் தீர்த்த தானப் படலம் 840 - 863 |861 மதங்கேசம், அபிராேமசம்.
  2. "shaivam.org | மதங்கீஸ்வரர் திருக்கோயில்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-11.
  3. tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருத்தல விளக்கம் | மதங்கேசம் | பக்கம்: 818.
  4. tamilvu.org | காஞ்சிப் புராணம் | அரிசாபபயந்தீர்த்ததானப் படலம் | பாடல் 22| பக்கம்: 265
  5. "palsuvai.ne | காஞ்சிபுர சிவலிங்கங்கள் | 47. மதங்கீஸ்வரர்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-03-11.

புற இணைப்புகள்

தொகு