காஞ்சிப்பாடல்
வீட்டில் பிணம் கிடக்கும்போது இக்காலத்தில் தெருவில் ஆடிக்கொண்டு பாணர் இறந்தவரின் பெருமைகளைச் சொல்லிப் பாடுவதுவே காஞ்சிப்பாடல்.
தொல்காப்பியம் காஞ்சிப் பாடலை “இன்னன் என்று இரங்கிய மன்னை” எனக் குறிப்பிடுகிறது.[1] மன் என்னும் இடைச்சொல் கழிந்த பொருளுக்காக இரங்குதலைக் குறிக்கும்.[2] எனவே இதனைத் தொல்காப்பியர் மன்னைப்பாடல் என வகுத்துக்கொள்கிறார்.
அதியமான் இறந்தபோது ஔவையார் அவனது கொடையை எண்ணி இரங்கிப் பாடிய
- சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே
- பெரிய கள் பெறினை
- யாம் பாடத் தாம் மகிழ்ந்து உண்ணும் மன்னே
- --- --- ---
- ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ [3]
என்னும் பாடலைத் தொல்காப்பிய மன்னைப் பாடலுக்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர் இளம்பூரணர் அளித்துள்ளார்.
காஞ்சி என்னும் சொல் பகைவர்களை வென்று மாண்ட போர்வீரர்களைக் குறிக்கும்.[4]