காடிங்டன் உருப்பெருக்கி
காடிங்டன் உருப்பெருக்கி (Coddington magnifier) என்பது ஒரு உருப்பெருக்கும் கண்ணாடி ஆகும். இது ஒரு மிகத்தடிமனான வில்லையகை் கொண்டுள்ளது. இந்த வில்லையின் நடுக்கோட்டில் மையக்காடி இடைத்திரையைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் காரணமாக மைய அச்சிற்கு நெருக்கமான கதிர்களால் ஏற்படும்கோளப் பிறழ்ச்சியானது குறைக்கப்படுகிறது. இந்த சிறப்பான அமைப்பின் காரணமாக வழக்கமான உருப்பெருக்கும் கண்ணாடியை விட வரை இந்த உருப்பெருக்கும் கண்ணாடி அதிக உருப்பெருக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. அதாவது 10× முதல் 20× உருப்பெருக்கும் திறனைக் கொண்டுள்ளது. பெரும்பாலான ஒற்றை வில்லை உருப்பெருக்கிகள் 5× அளவிற்கான உருப்பெருக்கும் திறனையேக் கொண்டுள்ளன. இத்தகைய உருப்பெருக்கிகளின் குறைபாடு என்னவென்றால் காடியுடனான இடைத்திரை உருப்பெருக்கியால் பார்க்கப்படும் பகுதியின் பரப்பினைக் குறைத்து விடுகிறது.
வரலாறு
தொகு1812 ஆம் ஆண்டு வில்லியம் ஐடு வோலஸ்டன் என்பவர் தொடக்க கால உருப்பெருக்கிகளின் மேம்பட்ட வடிவத்தை உருவாக்கினார். இவர் தனது வடிவமைப்பில் இரண்டு அரைக்கோளங்களை உள்ளடக்கிய ஒரு கோள வடிவ உருப்பெருக்கியை உருவாக்கினார். இவரது அமைப்பில் இரண்டு அரைக்கோளங்களுக்கிடையே ஒரு சிறிய அடைப்பு இருந்தது. டேவிட் புரூஸ்டர் வோலஸ்டன் உருவாக்கிய உருப்பெருக்கியில் இரு அரைக்கோளங்களுக்கு இடையில் கண்ணாடிக்குச் சமமான ஒளிவிலகல் குறிப்பெண் கொண்ட ஒளி ஊடுருவக் கூடிய சிமெண்டினால் அடைக்கும் போது சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். டேவிட் புரூஸ்டர் நடுவில் ஒரு ஆழமான காடியைக் கொண்ட ஒரே கண்ணாடியிலான கோளத்தைப் பயன்படுத்தினார்.[1]1829 ஆம் ஆண்டில், என்றி காடிங்டன் வோலஸ்டன்-பிரூவ்ஸ்டர் வில்லையைப் பொதுப்பயன்பாட்டிற்கு கொணர்ந்ததுடன் காடியின் வடிவமைப்பை மாற்றி அமைத்ததன் மூலம் அதன் வடிவமைப்பினை மேம்படுத்தினார். இருப்பினும் இதைக் கண்டுபிடித்தமைக்கான உரிமையை அவர் கோரவில்லை.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ An Introduction To Applied Optics, Volume II, L. C. Martin, Sir Isaac Pitman & Sons, Ltd, London, 1932.
- ↑ History of Science, Williams, Book 4, chapter V.