காடியால் குலையாமை

காடியால் குலையாமை (Acid-fastness) என்பது சில பாக்டீரியாக்களின் தன்மையை அறிய சாயமேற்றுகையில் காடிகளால் நிறம் கலையாமல் இருக்கும் பண்பைக் குறிக்கும்[1][2]

மைக்கோபாக்டீரியம் தியூபர்குளோசிசு (நீல இழைய/திசு பின்புலகத்தில் சிவப்பு நிறம்மேற்றிருப்பது.

காடிக்குலையா நுண்ணுயிரிகளின் பொதுத்தரமான நுண்ணுயிரியல் முறைகளின்படி (எ.கா கிராம் சாயமேற்றல்(Gram stain) வழி சாயமேற்றினால் எதிர்பாராத வகையில் கிராம்-நேர் பாக்டீரியா தன்மை காட்டும்) பண்பு வரையறை செய்தல் கடினம், ஆனால் அடர்ந்த சாயப் பொருளைக் கொண்டு, குறிப்பாக வெப்பத்தோடு செய்தால் சாயமேற்றலாம் இப்படிச் சாயமேற்றப்பட்ட பின்னர் இந்த நுண்ணுயிரிகள் மீது வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மென் காடிகள் அல்லது எத்தனால் அடிப்படையிலான நிறம் நீக்கிகளைப் பயன்படுத்தினால் அந்தச் சாயம் நீங்குவதில்லை, எனவே காடிக் குலையாமை என்னும் பெயர்[2]

மைக்கோபாக்டீரியா போன்றவற்றின் உயிரணு சுற்றுப்படலத்தின் காணப்படும் மைக்காலிக்குக் காடியால்(mycolic acid) சாயமேற்றலின் போது குறைவாக உறிஞ்சப்பட்டு ஆனால் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளப்படுகின்றது. காடியால் குலையாத நுண்ணுயிரிகளை அறியப் பயன்படும் சிறந்த சாயமேற்றும் முறையானது சீல்-நீல்சன் சாயம் (Ziehl–Neelsen stain) ஆகும். இதனால் இந்த நுண்ணுயிரிகளில் நல்ல சிவப்பு நிறம் ஏறுகின்றன, இது பின்புலத்தில் உள்ள நீல நிறத்தில் இருந்து தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. மற்றொரு முறை கின்யூன்(Kinyoun) முறையாகும். இதில் பாக்டீரியா நல்ல சிவப்பு நிறம் பெறுகின்றது, ஆனால் பின்புலம் பச்சை நிறம் கொண்டிருக்கும். காடிக்குலையாத பாக்டீரியாகளைச் சிலவகை ஒளிரும் சாயங்களால் (fluorescent dyes) (எ.கா. ஔராமைன் உரோடாமைன் சாயம்) நன்றாகக் காணமுடியும்[3].

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. Madison B (2001). "Application of stains in clinical microbiology". Biotech Histochem 76 (3): 119–25. doi:10.1080/714028138. பப்மெட்:11475314. 
  2. 2.0 2.1 Ryan KJ; Ray CG (editors) (2004). Sherris Medical Microbiology (4th ed.). McGraw Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8385-8529-9. {{cite book}}: |author= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  3. Abe C (2003). "[Standardization of laboratory tests for tuberculosis and their proficiency testing]". Kekkaku 78 (8): 541–51. பப்மெட்:14509226. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடியால்_குலையாமை&oldid=3848598" இலிருந்து மீள்விக்கப்பட்டது