கிராம்-நேர் பாக்டீரியா

கிராம்-நேர் பாக்டீரியா எனப்படுவது, கிராம் சாயமேற்றல் மூலம் ஆழ்ந்த நீல நிறம் அல்லது ஊதா நிறத்தைப் பெறும் பாக்டீரியா வகையாகும்[1]. ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம் என்ற டென்மார்க் நாட்டு அறிவியலாளர் பாக்டீரியாக்களை வகைப்படுத்தும் பொருட்டு உருவாக்கிய ஒரு சாயமேற்றல் முறையே கிராம் சாயமேற்றல் என அழைக்கப்படுகின்றது[2]. இது கிராம்-எதிர் பாக்டீரியா வகைக்கு எதிரானதாகும்.

நேர் சாயம் ஏற்றப்பட்ட ஊதாநிற கோலுயிரி மற்றும் கோளவுயிரி. இளஞ்சிவப்பு நிற எதிர் சாயமேற்றப்பட்ட கிராம்-எதிர் பாக்டீரியாக்களும் காணப்படுகின்றன

கிராம்-நேர் பாக்டீரியாக்கள், இழையங்களின் அடிப்படையில் ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் படிக ஊதா (Crystal violet) என்ற இழையவியலில் பயன்படுத்தும் சாயத்தைத் தமது உயிரணுக்களில் தக்க வைத்துக் கொள்வதனால் ஆழ் நீலம் அல்லது ஊதா நிறத்தைப் பெறுகின்றன. இவை இந்த நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ளக் காரணம் இவற்றின் கலச்சுவரில் உள்ள தடித்த பெப்டிடோகிளைக்கனினால் (Peptidoglycan) ஆன படலமாகும்[3].

எ.கா: ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (சங்கிலிக்கோளம்), ஸ்டஃபைலோகாக்கஸ் (கொத்துக்கோளம்)

வகையீடு தொகு

 

மேற்கோள்கள் தொகு

  1. Baron S, Salton MRJ, Kim KS (1996). "Structure". in Baron S et al.. Baron's Medical Microbiology (4th ). Univ of Texas Medical Branch. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-9631172-1-1. http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?rid=mmed.section.289. 
  2. Austrian, R. (1960). "The Gram stain and the etiology of lobar pneumonia, an historical note". Bacteriol. Rev. 24 (3): 261–265. பப்மெட்:13685217 .
  3. Bergey, David H.; John G. Holt; Noel R. Krieg; Peter H.A. Sneath (1994). Bergey's Manual of Determinative Bacteriology (9th ). Lippincott Williams & Wilkins. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-683-00603-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராம்-நேர்_பாக்டீரியா&oldid=1466736" இலிருந்து மீள்விக்கப்பட்டது