காடி ஆடு என்பது இந்தியாவில் உள்ள ஒரு வளர்ப்பு செம்மறியாட்டு இனம் ஆகும். இவை இந்தியாவில் காணப்படும் எட்டு செம்மறி ஆட்டு இனங்களில் ஒன்றாகும். இவை இந்தியாவின் வட மிதவெப்ப காலநிலைப் பகுதிகளில் காணப்படுகின்றன.[1] காடி ஆடுகள் அவற்றிடமிருந்து கிடைக்கும் கம்பளி தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. .[2] சிறிய உடலமைப்பைக் கொண்டது குறிப்பாக ஜம்மு மாநிலத்தின் கிஸ்த்துவார், படார்வா பகுதிகளில் காணப்படுகின்றன. குளிர்காலத்தில் இமாசலப்பிரதேசத்தின் குலுவாலி பகுதிகளிலும், கோடைக்காலத்தில் பிர்பாஞ்சல் மலைப்பகுதிகளிலும் படார் பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன.[3]

பண்புகள்

தொகு

இவை சிறிய உடலமைப்பைக் கொண்டவை. காடி ஆடுகளில் 10 - 15% ஆடுகளுக்கு மட்டுமே கொம்பு காணப்படும். இவற்றின் வால் சிறியதாகவும், மெல்லியதாகவும் இருக்கும்.[1] ஆடுகள் நடுத்தர அளவினதாகவும், சராசரி 26.5 கிலோ எடை கொண்டதாக இருக்கும். குட்டிகள் பிறந்த நேரத்தில் 2.5 கிலோ எடையுடன் இருக்கும். இவை அளவில் சிறியதாக இருந்தாலும் உறுதியானதாகவும், சரிவுகளில் நன்கு ஏறக்கூடியதாகவும் உள்ளன. இவற்றின் காதுகள் சிறியன. இவற்றின் உரோமங்கள் தரமானதாகவும் நீளமானதாகவும் இருக்கின்றன. உரோமங்கள் ஆண்டுக்கு மூன்றுமுறை வெட்டப்படுகின்றன (பிப்ரவரி, சூன் மற்றும் அக்டோபர்). ஆட்டில் ஆண்டுக்கு 1-1.5கி.கி ரோம‍ம் கிடைக்கின்றது. இதன் ரோமங்கள் கம்பளி விரிப்புகள், போர்வைகள் போன்றவை செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.[2] பொதுவாக, இந்த இன ஆடுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். அரிதாக சில காடி ஆடுகள் பழுப்பு மற்றும் கருப்பு கலந்து காணப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Gaddi". Breeds Profile. Central Sheep and Wool Institute, India. பார்க்கப்பட்ட நாள் 2014-09-18.
  2. 2.0 2.1 "Gaddi/India". Breed data sheet. Domestic Animal Diversity Information Service. பார்க்கப்பட்ட நாள் 2014-09-18.
  3. "செம்மறியாட்டினங்கள்". அறிமுகம். agritech.tnau.ac.in. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடி_ஆடு&oldid=3928755" இலிருந்து மீள்விக்கப்பட்டது