காடு வாழ்த்து

புறநானூறு 356ஆம் பாடல் காடு வாழ்த்து என்னும் துறையைச் சேர்ந்தது என்று ஒரு பதிப்பு குறிப்பிடுகிறது. [1] இந்தப் பாடலில் சுடுகாடு முதுகாடு என்று சுட்டப்பட்டு அது எப்படி இருந்தது என காட்டப்பட்டுள்ளது. எலும்பும் சாம்பலுமாகிய ‘களரி’ எங்கும் பரந்து கிடக்க, வழி நெடுகிலும் கள்ளிச் செடி இருக்க, ஆந்தை, கோட்டான் வகைப் பறவைகளான ‘கூகை’ இனம் பகலிலும் கூவிக்கொண்டிருந்தனவாம். பகலிலும் பிணம் எரியும் ஈம விளக்கு எரிந்துகொண்டிருந்ததாம். பேய்மகளிரின் நடமாட்டம் இருந்ததாம். ஈமப் புகை மேகம் சூழ்ந்துகொண்டிருந்ததாம்.

இப்படிப் பாடினால் அது காடுவாழ்த்து அல்லவா?

இந்தப் பாடல் ‘மகட்பாற்காஞ்சி’ என்னும் துறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிணமாக எரிபவனை அவன் வாழ்ந்த காலத்தில் விரும்பிய பலர் (‘நெஞ்சு அமர் காதலர்’) அழுத கண்ணீரானது வெந்து சூடு தணியாமல் இருக்கும் நீற்றுச் சாம்பலின் சூட்டைத் தணித்ததாம். – இந்தச் செய்தியையும் இந்தப் பாடல் குறிப்பிடுவதால் இதனை மகட்பாற்காஞ்சி எனவும் குறிப்பிடலாயினர்.

இது தாயங்கண்ணனார் பாட்டு.

அடிக்குறிப்பு

தொகு
  1. புறநானூறு எஸ்.ராஜம், மர்ரே பதிப்பு துறை அகராதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடு_வாழ்த்து&oldid=2053093" இலிருந்து மீள்விக்கப்பட்டது