காடை வளர்ப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இறைச்சிக்காக ஜப்பானியக் காடைகள் வளர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தக் காடைகள் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில அசைவக் கடைகளில் மட்டும் உணவாகப் பயன்படுத்தப்பட்டாலும், இந்தக் காடை இறைச்சியில் சில மருத்துவக் குணங்கள் இருப்பதாகக் கருதப்படுவதை அடுத்து வீடுகளில் இருப்பவர்களும் வாங்கத் தொடங்கியிருப்பதால் காடை வளர்ப்பில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்
தொகு- மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் காடையை வளர்க்கலாம்.
- குறைந்த முதலீட்டில் தொடங்கலாம்.
- காடைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகம்.
- காடைகளை 5 முதல் 6 வாரங்களில் விற்பனை செய்யலாம்.
- மிகக் குறைந்த அளவு தீவனமே போதுமானது.
- காடை இறைச்சியில் அதிக அளவு புரதமும் 22% குறைந்த அளவு கொழுப்பும் 5 % இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாகும்.
- ஊட்ட சத்து நிறைந்த முட்டை.
கொட்டகை அமைப்பு
தொகு1. ஆழ்கூள முறை
தொகு- இம்முறையில் ஒரு சதுர அடியில் 6 காடைகள் வரை வளர்க்கலாம்.
- காடைகள் முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்துப் பின் கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். இதனால் வளரும் பருவத்தில் அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தி வீணாகி குறைந்த எடைகொண்டதாக உருவாவதை தடுக்கலாம்.
2.கூண்டு முறை
தொகு- கூண்டின் அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டு கம்பிவலை 1.5 க்கு 1.5 செ.மீ. உள்ளதாக இருக்க வேண்டும்.
- கூண்டுகளை 4 முதல் 5 அடுக்குகளாக அமைக்கலாம். ஒவ்வொரு கூண்டுக்கும் கீழே தகடுகள் பொருத்தி கழிவுகளை தினமும் அப்புறப்படுத்தலாம்.
ஆதாரம்
தொகுகாடை வளர்ப்பு பரணிடப்பட்டது 2010-12-28 at the வந்தவழி இயந்திரம்