காட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில்

பெங்களூருக்கு அருகில் உள்ள முருகன் கோயில்

காட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில்(கன்னடம் : ಘಾಟಿ ಸುಬ್ರಮಣ್ಯ) என்பது பெங்களூரின் புறநகரில் துபகெரே, தொட்டபல்லாபுரா அருகில் அமைந்துள்ள ஒரு பழங்கால இந்து கோவில் ஆகும். இது பெங்களூர் நகரத்திலிருந்து 60கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு பிரபலமான யாத்திரை தலம் ஆகும். இந்த கோவிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், முதன்மைக் கடவுள் கார்த்திகேயன், நரசிம்மருடன் ஒன்றாகக் காணப்படுகிறார். தொன்மத்தின் படி, இரண்டு சிலைகளும் பூமியிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. இது கேதுவை வழிபடுவதற்கு தென்னிந்தியாவில் உள்ள ஒரு முக்கியமான மையமாகும். பிரம்மரத்தோஷத்தின் போது, அதாவது புஷ்ய சுத்த சஷ்டி நாளில் சிறப்பு சடங்குகள் செய்யப்படுகின்றன. நரசிம்ம ஜெயந்தி இங்கு கொண்டாடப்படும் மற்றொரு முக்கிய விழாவாகும்.[1][2]

காட்டி சுப்ரமண்யா கோவில்
காட்டி சுப்ரமண்யா கோவில்
பெயர்
தமிழ்:அருள்மிகு சுப்பிரமணியர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கருநாடகம்
மாவட்டம்:பெங்களூர்
அமைவு:தொட்டபள்ளபுரா
கோயில் தகவல்கள்
மூலவர்:முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

வரலாறு தொகு

காட்டி சுப்பிரமணியா 600 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. இது சந்தூர் பெல்லாரி பகுதிகளை ஆண்ட கோர்பேட் அரசர்களால் கட்டப்பட்டது.

பாரம்பரியம் தொகு

இத்தலத்தில் குழந்தையில்லாத தம்பதியினரின் வேண்டுதலுக்கு இணங்க குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு பக்தர்களால் நாகர் சிலைகளை நிறுவுவும் பழக்கம் உள்ளளது. இதனால் கோவிலுக்கு அருகில் ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளைக் காணலாம்.

வடிவமைப்பு தொகு

கருவறையில் ஏழு தலை நாகம் கொண்ட கார்த்திகேயரின் சிலையானது ஒரே கல்லில் செய்யப்பட்டதாக உள்ளது. சிலையின் பின் பின்புறத்தில் நரசிம்மரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதனால் முருகன் கிழக்கு நோக்கியும் நரசிம்மர் மேற்கு நோக்கியும் உள்ளனர். இரு தெய்வங்களும் ஒரே நேரத்தில் பக்தர்களுக்குத் தெரியும் வகையில், கருவறையில் பின்புறத்தில் ஒரு பெரிய கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.

இடம் தொகு

காட்டி சுப்ரமண்யா பெங்களூரில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ளது. தொட்டபல்லாபுரா வழியாக செல்லும் பாதை மிகவும் வசதியான பாதை. பொதுப் போக்குவரத்தைத் தேர்ந்தெடுத்தால், பெங்களூரிலிருந்து காட்டிக்குச் செல்லும் நேரடிப் பேருந்துகள் எண்ணிக்கையில் மிகக் குறைவு, மேலும் தொட்டபல்லாபுராவில் பேருந்து மாற்ற வேண்டியிருக்கும்.

கால்நடை கண்காட்சி தொகு

ஆண்டுதோறும் இங்கு திசம்பர் மாதத்தில் நடைபெறும் கால்நடை சந்தை மிகவும் பிரபலமானது. அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் கால்நடை சந்தையில் கலந்துகொள்கின்றனர்.

குறிப்புகள் தொகு

  • "Ghati Subramanya Temple Subrahmanya Ghati, Lakshmi Narasimha and Subramanya at Ghati". Karnatakavision.com. Archived from the original on 2012-05-29. பார்க்கப்பட்ட நாள் 2012-05-13.

வெளி இணைப்புகள் தொகு

  1. "Ghati Subramanya | Bangalore Rural District , Government of Karnataka | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
  2. "Ghati Subramanya Temple – A Must-visit near Bangalore". Karnataka.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.