கேது (நவக்கிரகம்)

கேது (Ketu) அசுரர்களும், தேவர்களும் மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு திருபாற்கடலை கடையும் போது, அமிர்தம் வெளிப்பட்டது. அதனை திருமால், மோகினி அவதாரம் கொண்டு முதலில் தேவர்களுக்கு வழங்குகையில், குறுக்கே புகுந்த ஒரு அசுரன் அமிர்தத்தை பருகிய அறிந்த சூரிய-சந்திரர்கள், இவ்விடயத்தை திருமாலிடம் கூற, திருமால் அமிர்த கரண்டியால் அமிர்தம் குடித்த அசுரனின் தலையை வெட்டியதால், உடல் இரண்டாக பிளவுபட்டது.[1][2][3]

கேது
Ketu:Tail of Demon Snake, sculpture from the British Museum
அதிபதிதென் சந்திரக் கணு
தேவநாகரிकेतु
வகைநவக்கிரகம், அசுரன்
துணைசித்திரலேகா

அமிர்தம் குடித்த முண்டத்துடன் கூடிய பகுதி கேதுவாகவும், தலையுடன் கூடிய பகுதி இராகுவாகவும் மாறியது.

தேய்பிறையின் கணுவாகும். இது அசுரனின் தலை வெட்டப்பட்ட பின்னான இராகுவின் உடற்பகுதி. இந்து தொன்மவியலில் நிழல் கிரகமாக கருதப்படுகின்றது. கேது மனித வாழ்விலும் முழு படைப்பிலும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்குமென நம்பப்படுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rise above the mundane...and material..says Ketu, the planet of detachment!". ganeshaspeaks.com.
  2. "The less known story of Rahu and Ketu!". speakingtree.in.
  3. "Role Of Ketu in Astrology". shrivinayakaastrology.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேது_(நவக்கிரகம்)&oldid=3893636" இலிருந்து மீள்விக்கப்பட்டது