மந்தார மலை
(மந்திர மலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மந்தார மலை (Mount Mandara) என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைவதற்காக பயன்படுத்தப்பட்ட மலையாகும். அவ்வாறு பாற்கடலை கடையும் போது, மந்திர மலை பாற்கடலுக்குள் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை அவதாரம் கொண்டு தாங்கியதாகவும், ஆதிசேஷனின் சகோதரனான வாசுகி எனும் பாம்பைக் கயிறாக பயன்படுத்தியதாகவும் புராணங்கள் கூறுகின்றன.