காட்டுவிலங்குப் பண்ணைத் தொழில்
காட்டுவிலங்குப் பண்ணைத் தொழில் (Wildlife farming) அல்லது வனவிலங்கு வளர்ப்பு அல்லது வனவிலங்கு விவசாயம் என்பது பெரும்பாலும் காட்டில் வாழும், பாரம்பரியமாக வளர்க்கப்படாத விலங்குகளை விவசாய முறையில் வளர்ப்பதைக் குறிக்கிறது. வேட்டையாடி அதைப் பதிவு செய்து வெளியிடுதல்; செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுதல்; உணவு மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்குத் தேவையான மூலப்பொருட்களைத் தயாரித்தல்; தோல், உரோமம், இழை போன்ற பொருட்களைத் தயாரித்தல் உள்ளிட்ட பலதரப்பட்ட நோக்கத்தோடு இவ்விலங்குகள் வளர்க்கப்படுகின்றன.[1][2][3]
கூறப்படும் நன்மைகள்
தொகுவனவிலங்கு வளர்ப்பின் மூலம் உணவுக்காக அதிகம் வேட்டையாடப்படும் வன விலங்குகளின் எண்ணிக்கையின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டு அதன் மூலம் அழிந்து வரும் உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும் என்று சில வனவிலங்குப் பாதுகாவலர்கள் வாதிடினாலும்[4] இம்முறையானது குறிப்பிடப்பட்ட சில உயிரினங்களைக் காப்பதைத் தவிர பெரும்பாலும் வனவிலங்குப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவே உள்ளது என்று மற்றவர்கள் கூறுகின்றனர்.[3]
சில ஆப்பிரிக்க சமூகங்கள் தாங்கள் ஆரோக்கியத்திற்கும் உயிர்வாழ்வதற்கும் தேவைப்படுவதாக நம்பும் விலங்கு புரதத்தின் தினசரி அளவைப் வேட்டையாடிப் பெறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.[5] எனினும் பெரும்பால நேரம் வேட்டையாடப்பட்ட இறைச்சி கவனமாக கையாளப்படாத காரணத்தினால் இது நோய்கள் பரவ பெரிதும் காரணமாக அமைகிறது. வனவிலங்கு வளர்ப்பு முறையாகப் பதப்படுத்தப்பட்ட இறைச்சியைத் தயாரித்து இந்த ஆப்பிரிக்க சமூகங்களுக்கு வழங்குவதன் மூலம் நோய்களின் பரவலைக் குறைக்கலாம் என்று கருதப்படுகிறது.[4]
தி எண்ட் ஆவ் ஈடன் என்ற தனது ஆவணப்படத்தில் தென்னாப்பிரிக்க திரைப்பட தயாரிப்பாளர் ரிக் லோம்பா சில வகையான வனவிலங்கு விவசாயத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்கு நிலையான, புத்துணர்ச்சியூட்டும் விளைவினை ஏற்படுத்துவதன் உதாரணங்கள் சிலவற்றை முன்வைத்தார்.[6]
ஆபத்துகள்
தொகுவனவிலங்கு வளர்ப்பு பல வகையான விலங்கியல் நோய்களின் தோற்றத்தோடு தொடர்புப் படுத்தப்படுகிறது. சார்ஸ் (SARs) தொற்றுநோயின் பிறப்பிடமாக புனுகுப்பூனை வளர்ப்பு அறியப்படுகிறது.[7]
வனவிலங்கு விவசாயத்தின் இன்றைய நிலை
தொகுசமீபத்திய ஆண்டுகளில், வனவிலங்கு வளர்ப்பில் தென்னாப்பிரிக்கா ஒரு பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. எனினும் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால் இது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.[8] மேலும் 33 காட்டு இனங்களை பண்ணை விலங்குகளாக மறுவகைப்படுத்தி வரையறை செய்ய இது வழிவகுத்துள்ளது.[9]
கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக, சீனாவில் சுமார் 20,000 வனவிலங்குப் பண்ணைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டுகளில், சீன அரசாங்கம் வனவிலங்கு விவசாயத் தொழிலின் வளர்ச்சியை மானியங்கள் தருவதன் மூலம் ஊக்குவித்து வந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றிற்கு சற்று முன்னர் 2017-ம் ஆண்டின் நிலவரப்படி சீனாவில் இத்தொழிலின் வர்த்தக அளவானது 520 பில்லியன் யுவான் அல்லது 57 பில்லியன் பவுண்டு என மதிப்பிடப்பட்டது இங்கு கவனிக்கத்தக்கது.[10]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள் தரவுகள்
தொகு- ↑ Damania, Richard; Bulte, Erwin H. (2007). "The economics of wildlife farming and endangered species conservation". Ecological Economics 62 (3–4): 461–472. doi:10.1016/j.ecolecon.2006.07.007.
- ↑ P, Chardonnet; B, des Clers; J, Fischer; R, Gerhold; F, Jori; F, Lamarque (Apr 2002). "The Value of Wildlife" (in en). Revue Scientifique et Technique (International Office of Epizootics) 21 (1): 15–51. பப்மெட்:11974626. https://pubmed.ncbi.nlm.nih.gov/11974626/. பார்த்த நாள்: 2020-06-04.
- ↑ 3.0 3.1 Tensen, Laura (2016-04-01). "Under what circumstances can wildlife farming benefit species conservation?" (in en). Global Ecology and Conservation 6: 286–298. doi:10.1016/j.gecco.2016.03.007. பன்னாட்டுத் தர தொடர் எண்:2351-9894. https://core.ac.uk/download/pdf/82244524.pdf.
- ↑ 4.0 4.1 Conniff, Richard (2016-08-30). "Wildlife Farming: Does It Help Or Hurt Threatened Species?". Yale E360 (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-04.
- ↑ Ntiamoa-Baidu, Yaa (1997). "Chapter 2 - Direct contribution of wildlife to food security". www.fao.org. பார்க்கப்பட்ட நாள் 2019-03-06.
- ↑ Lomba, Rick (1986). The End of Eden (film) (in ஆங்கிலம்).
{{cite AV media}}
: CS1 maint: date and year (link) - ↑ Barth, Brian (2020-03-29). "Can Asia's infectious disease-producing wildlife trade be stopped?". Grist (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-04.
- ↑ Kamuti, Tariro (2019-11-14). "South Africa struggles to manage wildlife ranching: why it's a problem". The Conversation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-04.
- ↑ Pinnock, Don (2019-10-15). "SA reclassifies 33 wild species as farm animals". Daily Maverick (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-04.
- ↑ Standaert, Michael (2020-02-25). "Coronavirus closures reveal vast scale of China's secretive wildlife farm industry" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/environment/2020/feb/25/coronavirus-closures-reveal-vast-scale-of-chinas-secretive-wildlife-farm-industry.