காட்டு சம்பகம்

காட்டு சம்பகம்
Flowers of Cananga odorata
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Cananga
இனம்:
C. odorata
இருசொற் பெயரீடு
Cananga odorata
(Lam.) Hook.f. & Thomson

காட்டு சம்பகம் அல்லது கருமுகை [1] (ஒலிப்பு) என்பது ஒரு வகையான மலரை குறிக்கும். இம்மலரை வைத்துக் கொண்டு எந்த நறுமணத்தை மனதில் நினைத்தாலும் அந்த நறுமணம் வீசும்.[2] மலர்களுக்கே உரிய வண்ணங்களில் இல்லாமல், இலைகளைப் போலவே பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மனோரஞ்சித மலர்கள் அதன் நிறத்தால் அல்லாமல் மணத்தாலே பூச்சிகளைக் கவருகின்றன. இம்மலர்க்கொடியில் பச்சைப் பாம்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மனோரஞ்சிதத்தின் பாகங்கள்

பொது தொகு

மனோரஞ்சிதம் சீதா மர இனத்தைச் சார்ந்தது (Annonaceae). இத்தாவரம் இந்தியாவிலும் ஆசியாவின் வெப்பமண்டலக்காடுகளிலும் தென்படுகிறது இந்தியாவில் மனோரஞ்சிதம் தாவரம் தமிழகம் மற்றும் ஆந்திராவில் அதிக அளவில் காணப்படுகிறது பூ. மனோரஞ்சிதப்பூ பார்க்க இலை போன்றே இருக்கும், அவ்வளவு ஈர்க்ககூடிய வண்ணம் இல்லை. வண்ணம் கவரக்கூடியதாக இல்லை என்றாலும் அதன் மணம் இருமடங்கு ஈர்ப்பை ஏற்படுத்திவிடும். மணத்திற்கு புகழ் பெற்ற மலர் மனோரஞ்சிதம். இது பொதுவாக வாசனை திரவியம் தயாரிக்கவும், கடவுளுக்கு அணிவிக்கவும் பயன்படுகிறது. ஒரு மலர் 8 மீட்டர் வரை மணம் பரப்பும். சிறியதாய் இருக்கும்போது புதர்செடி போலவும் வளர வளர மேலேறும் கொடியாகப் போகும். இது தன் கொக்கி போன்ற இளைய இலையைப் பயன்படுத்தி பிடிகொடுத்து வளர்கிறது. மனோரஞ்சித மலர் இளநிலையில் பச்சையாக இருக்கும். முதிர்ந்தவுடன் மஞ்சள் நிறமாகும். இதழ்கள் சதைப்பற்றுள்ளதாக இருக்கும். இதன் காய் கொத்தாக பச்சை நிறத்திலும் பழம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். ஒரே ஒரு (ஆமணக்கு விதை போன்ற) கொட்டை இருக்கும்.

சிறப்பு தொகு

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு இம்மலரை அதில் மிதக்க விட்டால் அந்த அறைமுழுவதும் மனோரஞ்சிதத்தின் மணம் கமழுமாம். எந்தப் பழத்தை நினைத்துக்கொண்டு இம்மலரை முகர்கிறோமோ அப்பழத்தின் வாசனையை இம்மலர் தருவதாக நம்பப்படுகிறது.

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. odorata Sampangi Champaka
  2. சுபத்ரா. "என்னமோ ஏதோ". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டு_சம்பகம்&oldid=3676661" இலிருந்து மீள்விக்கப்பட்டது