ஜீன் பாப்தித்தே லாமார்க்

ஜீன் பாப்டைசு லாமார்க்கு (Jean-Baptiste Pierre Antoine de Monet, Chevalier de Lamarck)(1 ஆகத்து 1744 – 18 திசம்பர் 1829), பெரும்பாலும் லாமார்க்கு என்று அறியப்படுகிறார். (/ləˈmɑːrk//ləˈmɑːrk/;[1] இவர் பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த இயற்கைவாதி ஆவார். இவர் ஒரு படை வீரராகவும், உயிரியல் அறிஞராகவும், கல்வியாளராகவும், இயற்கை விதிகளின்படி நிகழும் பரிமாணக் கோட்பாட்டை முதன் முதலில் அறிவித்தவராகவும், தொடர்ந்து இக்கோட்பாடு தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டவராகவும் இருந்தார்.

ஜீன் பாப்டைசு லாமார்க்கு
ஜே. பிசெட்டா என்பவரால் வரையப்பட்ட லாமார்க்கின் தனியுருவப்படம்,1893
ஜே. பிசெட்டா என்பவரால் வரையப்பட்ட லாமார்க்கின் தனியுருவப்படம்,1893
பிறப்பு (1744-08-01)1 ஆகத்து 1744
பேசென்டின், பிகார்டி, பிரான்சு
இறப்பு18 திசம்பர் 1829(1829-12-18) (அகவை 85)
பாரிஸ், பிரான்சு
குடியுரிமைபிரெஞ்சு நாட்டின் குடிமகன்
தேசியம்பிரெஞ்சு
அறியப்பட்டதுபடிவளர்ச்சிக் கொள்கை; பெறப்பட்ட பண்புகள்; பிலாசபி ஜுலாஜிக்

லாமார்க்கு புருசிய இராச்சியத்திற்கெதிரான பொமெரேனியன் போரில்(1757–62) பங்கேற்றார். அப்போரின் போது புரிந்த வீரதீரச்செயல்களுக்காக மொனாக்கோவில் நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.[2]அதன் பிறகு இயற்கையின் வரலாற்றில் ஆர்வம் கொண்ட அவர் மருத்துவத்தைப் படிப்பதென முடிவெடுத்தார்.[3] 1766 ஆம் ஆண்டு போரில் காயமடைந்ததற்குப் பிறகு இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். லாமார்க்கு தாவரவியலில் குறிப்பிடத்தகுந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். பிறகு, ஃபுளோரே ஃபிரானகாய்சு என்ற நுாலின் மூன்று பாகங்களை எழுதிய பிறகு (1778), அவர் பிரெஞ்சு கல்விசார் நிறுவனத்தின் உறுப்பினராவதற்கான தகுதியைப் பெற்றார்.

வாழ்க்கை வரலாறு

தொகு

ஜீன் பாப்டைசு லாமார்க்கு வடக்கு பிரான்சில் பிகார்டியில் உள்ள பேசென்டினில்[3] ஒரு வறுமையில் வாடிய உயர்குடியில் பதினோராவது குழந்தையாகப் பிறந்தவர்.[Note 1] லாமார்க்கின் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் வம்சாவழியாக பிரெஞ்சு இராணுவத்தில் பணியாற்றி வந்தனர். லாமார்க்கின் மூத்த சகோதரர், பெர்ஜென் ஆப் ஸூம் (1747) என்ற போர் முற்றுகையின் போது கொல்லப்பட்டார். லாமார்க்கின் குமரப்பருவத்தில் இன்னும் இரண்டு சகோதரர்கள் இராணுவத்தில் சேவையிலிருந்தனர். 1750 களின் பிற்பகுதியில் அவரது தந்தையின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்த லாமார்க் இயேசு சபையின் கட்டுப்பாட்டில் இருந்த ஏமியென்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். 1760 ஆம் ஆண்டில் அவரது தந்தை இறந்த பிறகு, லாமார்க் ஒரு குதிரையை வாங்கினார். அந்த நேரத்தில் செருமனியில் இருந்த பிரெஞ்சு இராணுவத்தில் சேர நாடெங்கிலும் சவாரி செய்தார். ஏழாண்டுப் போரில் புருசியாவுடன் நடந்த போர்க்களத்தில் மிகுந்த தைரியத்தை வெளிப்படுத்தினார். மேலும் அவர் துணை நிலை படை அதிகாரி நிலைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.[3]லாமார்க்கின் படைப்பிரிவு எதிரிகளின் நேரடி பீரங்கித் தாக்குதலைச் சந்திக்க நேர்ந்தது. இதன் காரணமாக அவர்களது எண்ணிக்கை பதினான்கு நபர்களாக குறைக்கப்பட்டது. மேலும் படைப்பிரிவை வழிநடத்த மூத்த அதிகாரிகள் யாருமில்லாத நிலையுமிருந்தது. அவர்களில் ஒருவர் பதினேழு வயதே நிரம்பிய புனி படைப்பிரிவை வழிநடத்தட்டும் எனவும் போர்க்களத்திலிருந்து பின்வாங்க உத்தரவிடவும் ஆலோசனை வழங்கினார். கட்டளையை லாமார்க் ஏற்றுக்கொண்ட போதிலும், அவர் விடுவிக்கப்படும் காலம் வரை நியமிக்கப்பட்ட இடத்திலேயே தொடர வலியுறுத்தப்பட்டார். அவர்களின் கர்னல் எஞ்சிய படைப்பிரிவு தங்கியிருந்த இடத்தை அடைந்த போது, லாமார்க்கு வெளிப்படுத்திய தைரியம் மற்றும் விசுவாசம் ஆகியவை அவர்களை மிகவும் கவர்ந்தன, லாமார்க்கு அந்த இடத்திலேயே அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டார். இருப்பினும், அவரது தோழர்களில் ஒருவர், அவரை தலையில் தூக்கிக் கொண்டாடிய போது, அவர் கழுத்தின் நிணநீர் சுரப்பிகளில் ஒரு வீக்கம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக பாரிஸ் அனுப்பப்பட்டார்.[3] அவருக்கு ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மேலும் ஓராண்டுக்கு சிகிச்சையானது தொடரப்பட்டது.[4]

லாமார்க்கியன் படிவளர்ச்சிக் கொள்கை

தொகு

லாமார்க் தனது உயிரியல் சார்ந்த ஆய்வுப்பணியில் இரண்டு கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். முதலாவது விலங்குகளில் அவற்றின் தகவமைப்பு உருவாக சூழ்நிலையே காரணம் எனக்கூறினார். இதற்கு, உதாரணமாக, பாலூட்டிகளில் காணப்படும் பற்களின் அமைப்பையும், துள்ளெலிகளின் குருட்டுத்தன்மையையும், பறவைகளுக்கு பற்களில்லாமையையும் எடுத்து வைத்தார். இரண்டாவது கோட்பாடானது, விலங்குகளின்வா உடலமைப்பு மற்றும் உறுப்புக்களின் அமைப்பு ஆகியவை வாழ்வை சந்திப்பதற்கான இயக்கங்களுக்கு ஏற்றவாறு ஒரு ஒழுங்கமைப்பில் உள்ளது எனத் தெரிவிக்கிறார். [5] உயிரியல் பரிணாமக் கோட்பாட்டை ப் பற்றி சிந்தித்த முதல் உயிரியலாளராக இவர் இல்லாதிருப்பினும் உண்மையில் ஒரு இணக்கமான பரிணாம கோட்பாட்டை உருவாக்கியவர் இவரேயாவார்.[6]1800 ஆம் ஆண்டுகளில் தனது ஃப்ளோரியல் தொடர்பான தனது விரிவுரையில் பரிணாமத்தைப் பற்றிய தனது கோட்பாடுகளை கோடிட்டுக் காட்டினார். பிறகு வெளியிடப்பட்ட மூன்று ஆராய்ச்சி நுால்களில் இது தொடர்பான விரிவான விளக்கத்தை முன் வைத்தார், லாமார்க் பரிணாம இயக்கிகளாக அவருடைய முந்தைய பொது அறிவு மற்றும் இவாசியேக்கு முந்தைய தனது சொந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலான வேதியியல் அறிவு ஆகியவற்றைக் கொண்டு பல வழிமுறைகளைப் பயன்படுத்தினார், அவர் பரிணாமத்தின் பின்புலமாக உள்ள இரண்டு சக்திகளைப் பற்றி விளக்குவதற்கு இந்த வழிமுறைகளை பயன்படுத்தினார்; விலங்குகளை தனது இயல்பான நிலையிலிருந்து சிக்கலான வடிவங்களாக வரையறுக்கும் ஒரு சக்தியாகவும், மற்றும் அந்தந்த விலங்கினத்தின் உள்ளூர் சூழல்களுக்கு ஏற்றவாறு விலங்குகளின் தகவமைப்பு மாறி அமைதல் என்பன அவை, மேலும் இந்த இயக்கு சக்தியே ஒவ்வொரு விலங்கையும் வேறுபடுத்தி அறிதல் சாத்தியமாகிறது. அடிப்படைக் கோட்பாடுகளான இயற்பியல் பண்புகளிலிருந்து இந்த சக்திகள் விளக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் நம்பினார்.

குறிப்புகள்

தொகு
  1. His noble title was Chevalier, which is French for knight.

மேற்கோள்கள்

தொகு
  1. "Lamarck". Random House Webster's Unabridged Dictionary.
  2. Damkaer (2002), p. 117.
  3. 3.0 3.1 3.2 3.3 Packard (1901), p. 15.
  4. Cuvier (1836)
  5. Osborn, Henry Fairfield (1905). From the Greeks to Darwin: an outline of the development of the evolution idea (2nd ed.). New York: Macmillan.
  6. Gould, Stephen Jay (2002). The Structure of Evolutionary Theory. Harvard: Belknap Harvard. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-00613-3.