காண்டு அணு உலை

காண்டு (CANDU - CANada Deuterium Uranium என்பதன் சுருக்கம்) அணு உலை கனடாவில் கண்டறியப்பட்ட அழுத்த கனநீர் அணு உலை ஆகும். இதன் ஆங்கிலப் பெயர் சுருக்கம் தியூட்டிரியம் ஆக்சைடை (கன நீர்) மட்டுப்படுத்தியாகவும் இயற்கை யுரேனியத்தை எரிபொருளாகவும் பயன்படுத்தியதை ஒட்டி சூட்டப்பட்டது. காண்டு அணு உலைகள் முதன்முதலாக 1950களின் பிற்பகுதியிலும் 1960களிலும் கனடிய அணுசக்தி கழகமானது ஒண்டோரியோ நீர் மின் கழகம் (தற்போது ஒண்டோரியோ மின் உற்பத்தி), கனடிய ஜெனரல் எலெக்ட்ரிக் (தற்போது ஜிஈ கனடா) மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து மேம்படுத்தப்பட்டது.கனடாவில் இயங்கும் அனைத்து அணு மின் நிலையங்களும் காண்டு வகை அணு உலைகளைக் கொண்டுள்ளன.இதனை வெளிநாடுகளில் சந்தைப்படுத்தத் துவங்கி தற்போது இத்தகைய அணு உலைகள் இந்தியா, பாக்கித்தான், அர்ச்சென்டீனா, தென் கொரியா, உருமேனியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இயங்கி வருகின்றன. அக்டோபர் 2011இல் கனடிய கூட்டாட்சி அரசு இந்த வகை அணு உலைகளின் வடிவமைப்பிற்கான உரிமத்தை காண்டு எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது.

சீனாவிலுள்ள கின்சன் அணு மின் நிலையம் கட்டம் III அலகுகள் 1 & 2 (30.436 N 120.958 E): இரண்டு காண்டு 6 அணு உலைகள், கனடிய அணுசக்தி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு மூன்றாம் கின்சன் அணுமின் கழகத்தினால் இயக்கப்படுகிறது

இயக்கத்தில் உள்ள காண்டு அணு உலைகள்தொகு

தற்சமயம் 29 காண்டு உலைகள் உலகெங்கும் இயக்கத்தில் உள்ளன. இந்தியாவில் 1974ஆம் ஆண்டில் அணுகுண்டு வெடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கனடா தனது அணுக்கருவியல் வணிகத்தை முறித்துக் கொண்டதால் இங்கு காண்டு வழிவந்தவைகள் 13 இயக்கத்தில் உள்ளன.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காண்டு_அணு_உலை&oldid=2745644" இருந்து மீள்விக்கப்பட்டது