காதம்பரி (இதழ்)

காதம்பரி 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ஏ. கே. ஜெயராமன் ஆவார். இது கவிதை, கதை, சிறுகதை, கட்டுரை, நாவல், நாடகம், தொடர் நாவல் எனத் தரமான படைப்புகளை வெளியிட்டது.

வரலாறுதொகு

1940 களின் இறுதியில், சென்னையில் அ. கி. ஜயராமன், அ. கி. கோபாலன் இருவரும் புதினத்துக்கென்றே 'காதம்பரி' மாத இதழைத் துவக்கினர். மாதம் தோறும் 'ஒரு முழு புதினம்' வெளியிடவும், மேலும் சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற அம்சங்களைப் பிரசுரிக்கவும் 'காதம்பரி' தோன்றியது. வெளியீட்டு வாய்ப்பைப் பெறாமலே கிடந்த புதுமைப்பித்தனின் ‘கயிற்றரவு' கதை இதில்தான் முதன் முறையாக அச்சாயிற்று. மாதம் தோறும் பிரசுரமாகும் புதினத்துக்கு ஒரு பவுன் அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது ‘காதம்பரி'. ‘காதம்பரி' நீண்ட நாள் வெளிவரவில்லை. ஏறக்குறைய ஆறு இதழ்களே வந்தன.[1]

இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

குறிப்புகள்தொகு

  1. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 44–54. 13 நவம்பர் 2021 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதம்பரி_(இதழ்)&oldid=3325927" இருந்து மீள்விக்கப்பட்டது