காதலன் யாரடி (திரைப்படம்)

காதலன் யாரடி 2014 பெப்ரவரியில் வெளிவந்த திரைப்படமாகும். இதை ராசேசு கிரவுன் இயக்கியுள்ளார்[1]. இப்படத்தில் சிவசித், சில்பா போன்ற பலர் நடித்துள்ளனர்.

காதலன் யாரடி
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ராசேசு கிரவுன்
கதைராசேசு கிரவுன்
நடிப்புசிவசித்
சில்பா

வெளியீடுபெப்ரவரி 2, 2014 (2014-02-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

மாயாவின் அம்மா ஒரு மாவட்டத்தின் ஆட்சியர். மாயா அதே மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் சேது என்பவரும் படித்து வருகிறார். சேதுவும், சக்தியும் நண்பர்கள். சக்தி ஊர்திகளை பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். மாயாவின் அம்மா ஒருநாள் மகிழுந்து குண்டுவெடிப்பில் கொல்லப்படுகிறார். இவருடைய சாவுக்கு தீவிரவாதிகள்தான் காரணம் என்று காவல்துறையும், பொதுமக்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தன்னுடைய தாயின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க காவல்துறையிடம் சென்று மாயா புகார் கொடுக்கிறாள். புகாரின்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க ஆரம்பிக்கிறது. தனிமையில் விடப்பட்ட மாயா, கொலை செய்தவரை கண்டுபிடிக்கும் முயற்சிக்கு கைகொடுக்குமாறு சேது மற்றும் சக்தியின் உதவியை நாடுகிறாள். அவர்களும் இவளுக்கு உதவி செய்வதாக கூறுகின்றனர். அதனால், அவர்களுடனே தங்கி விடுகிறாள்.

இதற்கிடையில் ஆட்சியர் மரணத்தை மீண்டும் தோண்டி எடுக்க காரணமாக இருந்த மாயாவை தீர்த்துக்கட்ட நாகா முடிவெடுக்கிறார். கொலையாளிகளால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்று எண்ணும் மாயா, சக்தியுடன் கேரளாவுக்கு பயணப்படுகிறாள். போகும் வழியிலேயே சக்திக்கு மாயா மீது காதல் வந்துவிடுகிறது. ஆனால், மாயாவோ வேறு ஒருவரை கனவில் நினைத்துக் கொண்டு இருக்கிறார்.

இறுதியில் மாயா தனது தாயின் மரணத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து பழிவாங்கினாரா? சக்தியும் மாயாவும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

மேற்கோள்கள் தொகு

  1. "காதலன் யாரடி". மாலைமலர். பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)