காதலர் ஒப்புமை

காதலர் எந்தெந்த வகையில் ஒத்திருக்கவேண்டும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [1]

  1. பிறப்பு
  2. குடிமை (குடி இயல்பு)
  3. ஆண்மை, பெண்மைத் தன்மைகள்
  4. ஆண்டு
  5. உருவப் பொலிவு
  6. ஒத்த காம எழுச்சி
  7. நிறை (நிறை எனப்படுவது மறை பிறர் அறயாமை)[2]
  8. அருள் என்னும் கொடைத்தன்மை
  9. உணர்வு ஒத்திருத்தல்
  10. திரு என்னும் செல்வ-நிலை

ஆகியவற்றில் காதலனும் காதலியும் ஒத்திருக்க வேண்டும்

இவற்றில் ஆண்மகன் சற்று உயர்ந்த நிலையினன் ஆகவும் இருக்கலாம். [3]

காதலரிடையை எந்த எந்த பண்புகள் இருக்கக்கூடாது என்பதையும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். [4]

  1. நிம்பிரி (அழுக்காறு, ஔவியம்)
  2. கொடுமை (அறன் அழியக் கொடுமை செய்ய எண்ணுதல்)
  3. வியப்பு (தம்மைப் பெரிதாக நினைத்தல்)
  4. புறமொழி (புறங்கூறுதல்)
  5. வன்சொல் (கடுமையாகத் திட்டுதல்)
  6. பொச்சாப்பு (தன்னை மறந்து செயல்படுதல்)
  7. மடிமை (முயற்சி இல்லாமை)
  8. குடிமை இன்புறல் (தன் குடிப் பெருமையை நினைத்து இன்புறுதல்)
  9. ஏழைமை (பேதைமை, உண்மையை அறிய மறுத்தல்)
  10. மறப்பு (கற்றதையும், கேட்டதையும் மறத்தல்)
  11. (போலி) ஒப்புமை (அவனைப் பான்றவன் இவன், அவளைப் போன்றவள் இவள் என ஒப்பிட்டுப் பார்த்தல்)

ஆகியவை இருக்கக்கூடாது.

அடிக்குறிப்பு தொகு

  1. தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் நூற்பா 25
  2. கலித்தொகை 133
  3. தொல்காப்பியம், களவியல் நூற்பா 2
  4. தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 26
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதலர்_ஒப்புமை&oldid=1236031" இலிருந்து மீள்விக்கப்பட்டது