காத்தவராயன் கதைப்பாடல் (நூல்)

காத்தவராயன் கதைப்பாடல் நா. வானமாமலை அவர்களால் தொகுத்து, ஆய்வு செய்து எழுதப்பெற்ற நூலாகும். [1] இந்த நூலில் வானமாமலை தன்னுடைய ஆய்வு குறித்த கட்டுரையையும், கதைப்பாடலையும் தொகுத்துள்ளார். [1]

காத்தவராயன் கதைப்பாடல்
காத்தவராயன் கதைப்பாடல்
நூலாசிரியர்நா. வானமாமலை
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வெளியிடப்பட்ட நாள்
1971
பக்கங்கள்65

நாட்டார் வழக்காற்றியல் குறித்து கதைப்பாடல்களில் அதிகம் பேசப்படுகின்றன. வண்ணார்கள் பற்றிய குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளதாகவும், அவை முக்கியமான வரலாற்று ஆவணமென்றும் தி இந்து தமிழ் நாளிதழில் பார்க்கத் தகாதவர்களாக்கப்பட்ட மனிதர்கள் என்ற கட்டுரையில் வெ. சந்திரமோகன் கூறுகிறார். [2]

இந்நூலை மதுரைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் காத்தவராயன் என்பவரின் வரலாற்றை பதிவு செய்யும் நாட்டார் கதைப்பாடல் இடம்பெற்றுள்ளது.

உள்ளடக்கங்கள்

தொகு
  • காத்தவராயன் கதைப்பாடல்
  • நன்றியுரை
  • கதைப்பாடல்
  • குறிப்புகள்

காத்தவராயன் கதைப்பாடல் - இப்பகுதியில் காத்தவராயன் கதைப்பாடல் குறித்து தன்னுடைய ஆய்வினையும், கருத்தையும் வெளிப்படுத்துகிறார்.

நன்றியுரை - மதுரைத் திட்டத்திற்கு நன்றி தெரிவித்தல்.

கதைப்பாடல் - கதைபாடலின் தொகுப்பு

குறிப்புகள்- கதைபாடலின் சொற்கள் சிலவற்றுக்கான பொருள், பிற பாடலுடன் ஒப்புமை, விளக்கம் ஆகியவை நிறைந்தது.



ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 [http://keetru.com/ungal_noolagam/mar07/vanamamalai_4.php பேராசிரியர் நா. வானமாமலையின் கட்டபொம்மன் கதைப்பாடல் பதிப்பு ஆ. சிவசுப்பிரமணியன்]
  2. http://m.tamil.thehindu.com/general/literature/பார்க்கத்-தகாதவர்களாக்கப்பட்ட-மனிதர்கள்/article6917501.ece[தொடர்பிழந்த இணைப்பு] பார்க்கத் தகாதவர்களாக்கப்பட்ட மனிதர்கள் பிப்ரவரி 21, 2015

வெளி இணைப்புகள்

தொகு